'சிங்கப் பெண்' கமாண்டர் ஸ்வாதி

Added : பிப் 02, 2020 | கருத்துகள் (6)
Advertisement
'சிங்கப் பெண்' கமாண்டர் ஸ்வாதி

கடைக்கண் பார்வையால் ஆக்ரோஷ அலைகளுக்கும் கருணையை கற்றுத் தந்தவள்... பூவிதழ் புன்னகையால் பெரும் புயலுக்கும் பொறுமையை பெற்றுத் தந்தவள்...
காலடி சத்தத்திலே விண்ணை தாண்டிய பேரிடியை புதைத்தவள், நம்பிக்கை கை கொண்டு பாய்மரப் படகிற்கு நங்கூரம் பாய்ச்சியவள், கோரப் பசியின் வெறியால் தெறித்து பாய்ந்த சுறாக்களுடன் சமாதானம் பேசியவள், சிந்திய வியர்வையும் சினம் கொண்ட சிங்கமாய் சீறும், இவள் இந்திய பெண் என உலகமே உரக்க கூறும்... என தேசம் கொண்டாடும் ஆந்திரா கடற்படை கமாண்டர் பத்ரபள்ளி ஸ்வாதி கடல் மார்க்கமாக உலகம் சுற்றிய சாதனை குறித்து மனம் திறக்கிறார்...
சாதிக்க வேண்டும் என கனவுகளுடன் கடற்படையில் சேர்ந்து பயிற்சி பெற்றேன். ஆண்டுதோறும் கடற்படை பெண் அதிகாரிகள் ஏதாவது ஒரு சாகசம் நிகழ்த்த வேண்டும். அந்த வகையில் நான் உட்பட ஆறு பெண் அதிகாரிகள் பாய்மர படகில் உலகம் சுற்றும் சாதனைக்கு தேர்வானோம். 2017 செப்.,ல் கமாண்டர் வர்திகா ஜோஷி தலைமையில் கோவாவில் இருந்து நம் நாட்டில் தயாரிக்கப்பட்ட 'தாரணி' என்ற பாய்மர படகில் சாதனை பயணத்தை துவங்கினோம்.'நீங்கள் பெண், ஆண் என்ற பாலின மனநிலையில் இருந்து வெளியே வந்த பிறகு கப்பலில் ஏறுங்கள்' என்று, பயிற்சியாளர் கூறினார். அதற்கு பின் மனதை ஒருமுகப்படுத்தி ஒரு நிமிடம் யோசித்து பார்த்தேன். துணிச்சலை வரவழைத்து கொண்டு கப்பலில் காலடி எடுத்து வைத்தேன். ஆண்களுக்கு நிகராக பெண்கள் பல சாதனைகளை செய்யும் இந்த உலகில் நம்மால் இதை செய்ய முடியும் என்ற நம்பிக்கையுடன் ஆழ்கடலை ஆச்சர்யமாக பார்த்தபடி பயணித்தேன்.காற்று, மழை, வெயில், கடல் சீற்றம் என ஒவ்வொரு நாளும் பல சவால்களை சந்தித்து இலக்கு நோக்கி முன்னேறினோம். காற்று குறைவான நேரங்களில் கப்பலை இயக்க சிரமப்பட்டோம். கப்பல் இயக்க சிரமம் என்பதை விட சூழ்நிலைக்கு ஏற்ப மனநிலையை மாற்றிக் கொள்ள அதிக சிரமப்பட்டோம். ஆறு கட்டமாக சென்ற எங்கள் பயணத்தின் போது கப்பலை எந்த துறைமுகத்திலும் நிறுத்தவில்லை. எரிபொருள் நிரப்ப, பராமரிக்க மட்டும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, மொரீஷியஸ் நாடுகள், பாக்லாண்ட் தீவு துறைமுகங்களில் கப்பலை நிறுத்தினோம்.
5 நாடுகளை கடந்து, 4 கண்டங்களை தொட்டு, 3 பெருங்கடல்களை தாண்டி, 254 நாட்கள், 21,600 நாட்டிக்கல் மைல் பயணித்த அனுபவங்கள் இன்றும் என் கண்முன் காட்சிகளாக தெரிகிறது. 254 நாட்களில் 194 நாட்கள் மிகவும் ஆழமான கடல் பகுதிகளில் கப்பல் சென்ற போது கூட நாங்கள் தைரியமாக இருந்தோம். நீண்ட பயணத்திற்கு பின் 2018 மே., மாதம் நாடு திரும்பினோம். கப்பலில் பயணித்த போது தீபாவளி, பொங்கல் பண்டிகை நாட்களில் பிரதமர் மோடி சேட்டிலைட் போனில் எங்களை தொடர்பு கொண்டு வாழ்த்தினார். எங்கள் பிறந்தநாளை கூட தெரிந்து வைத்து கொண்டு வாழ்த்தியதை நினைத்து நெகிழ்ந்து போனோம்.பயணம் முடித்து மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றோம். அவர் எங்களை வாழ்த்திய போது எடுத்த போட்டோக்களை தன் டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார். கடற்படையின் உயரிய விருதான 'நவ சேனா' விருதுக்கும் பரிந்துரை செய்தார். மோடி, இந்தியா மட்டுமல்ல உலகிற்கே எடுத்துக்காட்டாக திகழ்கிறார். இந்திய கடற்படை, பெண்களின் துணிச்சலை உலகறிய செய்த பெண்களில் நானும் ஒருவராக இருந்ததை நினைக்கும் போது பெருமையாக இருக்கிறது என, பேசி முடித்த ஸ்வாதி அடுத்த சாதனையின் இலக்கு நோக்கி பயணித்தார்... pswathi0906@gmail.com

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
dandy - vienna,ஆஸ்திரியா
04-பிப்-202015:45:20 IST Report Abuse
dandy டாஸ்மாக் நாட்டில் இந்த வேளைக்கு பெண்கள் போக மாடடார்களா?
Rate this:
Share this comment
Cancel
r ganesan - kk nagar chennai,இந்தியா
04-பிப்-202013:55:43 IST Report Abuse
r ganesan என் மனமுவந்த பாராட்டுக்கள்.
Rate this:
Share this comment
Cancel
Cheran Perumal - Radhapuram,இந்தியா
04-பிப்-202013:15:44 IST Report Abuse
Cheran Perumal பெண்கள் மனதளவில் உறுதியானவர்கள். ஆண்கள் எளிதில் உடைந்து போவார்கள்.குடிகாரக்கணவன்களிடம் மாட்டிக்கொண்ட தமிழ்நாட்டுப்பெண்கள் எவ்வளவு உறுதியுடன் வாழ்க்கையை எதிர்கொள்கிறார்கள் என்பதை நினைத்து வியந்து போவேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X