கொரோனாவை வென்ற காதல்:சீன பெண்ணை கைப்பிடித்த இந்திய இளைஞர்

Updated : பிப் 03, 2020 | Added : பிப் 03, 2020 | கருத்துகள் (17) | |
Advertisement
போபால்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதைப் பற்றி எந்த கவலையும்படாமல் காதலித்த சீன பெண்ணை கைப்பிடித்தார் மத்திய பிரதேச இளைஞர்.மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சவுர் பகுதியை சேர்ந்த சத்யார்த் மிஸ்ரா, 5 ஆண்டுகளுக்கு முன்பாக கனடாவில் படிக்கும் போது சீனாவை சேர்ந்த ஜிஹாவோவை சந்தித்துள்ளார். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. காதலை குடும்பத்தார்
CoronaVirus, ChineseWoman, Marry, MP_Man, MP, MadhyaPradesh, Marriage, கொரோனா, வைரஸ், தாக்குதல், பாதிப்பு, சீனா, பெண், மத்தியபிரதேசம், திருமணம்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

போபால்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், அதைப் பற்றி எந்த கவலையும்படாமல் காதலித்த சீன பெண்ணை கைப்பிடித்தார் மத்திய பிரதேச இளைஞர்.

மத்திய பிரதேச மாநிலம் மண்ட்சவுர் பகுதியை சேர்ந்த சத்யார்த் மிஸ்ரா, 5 ஆண்டுகளுக்கு முன்பாக கனடாவில் படிக்கும் போது சீனாவை சேர்ந்த ஜிஹாவோவை சந்தித்துள்ளார். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்துள்ளது. காதலை குடும்பத்தார் ஏற்றுக்கொண்டதால் திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே சீனாவில் கொரோனா வைரஸ் பரவி, அங்குள்ள மக்கள் பாதிப்படைந்துள்ளனர். இந்த வைரஸ் தாக்குதலில் இதுவரை, 360க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 17,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸை உலக நாடுகளுக்கு பரப்பிய சீனாவில் இருந்து மத்தியப்பிரதேசத்துக்கு வந்த சீன இளம்பெண், இந்திய காதலனை கைப்பிடித்தார். 
 மணமகள் Zhihao Wang, ஜிஹாவோ வாங். மணமகன் சத்யார்த் மிஸ்ரா. இருவரும் 5 ஆண்டுகளுக்கு முன் கனடாவில் படித்தபோது காதலித்தனர். எல்லை தாண்டிய காதலை இரு வீட்டாரும் ஏற்றுக்கொண்டனர். மத்தியப்பிரதேசத்திலுள்ள மணமகனின் சொந்த ஊரில் 2-ம்தேதி திருமணம் இந்திய முறைப்படி நடந்தது. கொரோனாவைரஸ் பற்றி எங்களுக்கு கவலை இல்லை என்கின்றனர், மணமக்கள். ஆனால் மத்தியப்பிரதேச டாக்டர்களுக்கு இருக்கிறதே. மணமகள் வாங், அவரது பெற்றோர், இன்னும் 2 உறவினர்கள் பின்னாலேயே டாக்டர்கள் சுற்றிக்கொண்டிருக்கின்றனர். 5 பேரும் ஜனவரி 29ம்தேதிதான் இந்தியா வந்துள்ளனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் இப்போதைக்கு கொரோனாவைரஸ் அறிகுறி இல்லை. வாங்குக்கு தினமும் பிளட் டெஸ்ட் எடுக்கப்படுகிறது. ஒரு சின்ன அறிகுறி தெரிந்தாலும் மணமகளை அப்படியே மருத்துவமனைக்கு தூக்கிச்சென்று விடுவோம் என்கின்றனர், டாக்டர்கள். ம.பி.யில் வைரஸ் பரவிடக்கூடாது என்பது டாக்டர்களின் எண்ணம். ஆனால், சீனா திரும்பும் முன் இந்தியாவில் பல சுற்றுலாஸ்தலங்களை சுற்றிப் பார்த்துட்டுத்தான் போவேன்''னு மணமகள் வாங் அடம்பிடிக்கிறார். அதிகாரிகள் ஆடிப்போயிருக்கின்றனர்.


latest tamil news


இதனால், சீனாவிலிருந்து இந்தியா வரும் பயணிகள் பல்வேறு சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், சத்யார்த் - ஜிஹாவோ திருமணம் திட்டமிட்டபடி நடக்குமா என சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும், ஜிஹாவோ மற்றும் அவரது தாய், தந்தை உட்பட 5 பேர் ஜன.,29ம் தேதி இந்தியா வந்துள்ளனர். அவர்களை மண்ட்சவுர் மாவட்ட மருத்துவமனை டாக்டர் ஏ.கே.மிஸ்ரா தலைமையிலான 6 பேர் கொண்ட குழு தீவிரமாக சோதனை செய்தனர். அதில், 5 பேருக்கும் வைரஸ் பாதிப்பு இல்லாதது கண்டு பிடிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று (பிப்.,02) திருமணம் நடைபெற்றது.


latest tamil news


திருமணம் குறித்து மணப்பெண் ஜிஹாவோ கூறுகையில், 5 ஆண்டுகளாக காதலித்த நாங்கள், பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொள்ள முடிவு செய்தோம். இதற்காக சீனாவில் இருந்து இந்தியாவிற்கு 9 பேர் வர திட்டமிட்டோம். ஆனால், 4 பேருக்கு விசா கிடைக்காததால் 5 பேர் மட்டும் திருமணத்தில் பங்கேற்றோம். திருமணம் முடிந்ததால் நாங்கள் இந்தியாவின் முக்கிய சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க இருக்கிறோம். கொரோனா வைரஸ் பரவக் கூடாது என்பது தெரியும். அதன் அறிகுறி தென்பட்டால் எங்கள் நாட்டிற்கு திரும்ப சென்று விடுவோம், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
munusamyganesan - CHENNAI,இந்தியா
04-பிப்-202016:54:31 IST Report Abuse
munusamyganesan ஹாய், வாழ்க பல்லாண்டு கல்யாண வாழ்க்கை நூறாண்டு. தம்பதிகள் இருவருக்கும் என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.காதலுக்கு நிறம்,மொழி, இனம், நாடு, பேதம் என்பது கிடையாது. மனம் ஒன்றே போதும்.கடைசிவரை கைவிடாமல் கணவன்,மனைவியாக வாழ்ந்தால் காதல் புனிதமானது.இன்று நாட்டில் விவாகரத்து அதிகரித்து விட்டது என்றாலும் இது போன்ற திருமணங்கள் வரவேற்போம். நாட்டில் பெண் சிசு கருவில் அழிக்கின்றனர். பெண்கள் இல்லாத உலகம் பாலைவனம். பெண்கள்,ஆண்கள் ஒற்றுமையாக இருந்து குடும்பத்தை நடத்தவே சான்றோர்கள் திருமணம் முறை உருவாக்கினார்.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
04-பிப்-202003:42:42 IST Report Abuse
Rajagopal வாழ்க வளமுடன்
Rate this:
Cancel
Aarkay - Pondy,இந்தியா
04-பிப்-202000:29:19 IST Report Abuse
Aarkay போச்சு போச்சு அங்கு எவ்வளவு பேருக்கு வைரஸ் பரவப்போகிறதோ? ஸ்க்ரீனிங் செய்தபின் அனுமதித்தார்களா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X