சென்னை: 'தமிழகத்தை ஆள ரஜினியை அனுமதிக்க முடியாது' என இயக்குனர் பாரதிராஜா திடீர் எதிர்ப்புகொடி துாக்கியுள்ளார்.
வரும் சட்டசபை தேர்தலின் போது கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிடப் போவதாக நடிகர் ரஜினி அறிவித்து உள்ளார். 'அவர் தமிழர் இல்லை; தமிழன் தான் தமிழகத்தை ஆள வேண்டும்' என்ற புதிய கோஷத்தை சில அரசியல் கட்சிகளும் இயக்குனர்கள் பாரதிராஜா உள்ளிட்டோரும் எழுப்பியுள்ளனர்.

இந்நிலையில் தனியார் 'டிவி'க்கு பாரதிராஜா நேற்று அளித்த பேட்டி: மஹாராஷ்டிரா மாநிலத்தை மராட்டியரும் கர்நாடகாவை கன்னடரும் அசாமை அம்மாநிலத்தவரும் தான் ஆளுகின்றனர். எங்கள் மண்ணின் மைந்தர் மட்டும் ஏன் முதல்வராகக் கூடாது? முந்தைய மோசமான உதாரணத்தை காட்டி 'அவர் ஆனாரே; நான் ஏன் ஆகக் கூடாதா' என கேட்கக் கூடாது. தமிழர்கள் முன்னர் தெரியாமல் துாக்கி சுமந்தனர். இங்கே ஒரு வெள்ளையர் முதல்வராவதை எப்படி ஏற்க முடியாதோ அதேபோல ரஜினியையும் ஏற்க முடியாது.
'நான் தமிழன் தான்' என ரஜினி கூறினாலும் அவர் இங்கே வாழ வந்தவர்; தமிழர் இல்லை. ரஜினியை பொறுத்தவரை நல்ல மனிதர்; எளிமையின் உச்சம்; என் நண்பர். ஆனாலும் அவரை தமிழகத்தை ஆள விட மாட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE