கோர்ட் செய்தி

தமிழ்நாடு

வக்கீல் ஜோதிக்கு போலீஸ் பாதுகாப்பை நீட்டிக்க ஐகோர்ட் இடைக்கால உத்தரவு

Added : மே 27, 2011
Advertisement

சென்னை : "தி.மு.க., பிரமுகரும், முன்னாள் எம்.பி.,யுமான ஜோதிக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பை தொடர வேண்டும்' என, சென்னை ஐகோர்ட் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. "ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு கேட்டு, முன்னாள் எம்.பி.,யும் வக்கீலுமான ஜோதி தாக்கல் செய்த மனு, நீதிபதி ராஜேஸ்வரன் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வேட்டி, சட்டை அணிந்து கோர்ட்டுக்கு வக்கீல் ஜோதி வந்திருந்தார். அவரே, நீதிபதி முன் ஆஜராகி வாதாடினார். அரசு சார்பில் அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் ஆஜரானார்.


கோர்ட்டில் நடந்த வாதம்:வக்கீல் ஜோதி: அ.தி.மு.க., பொதுச் செயலர் மீதான வழக்குகளில் அவர் சார்பில் நான் ஆஜராகியுள்ளேன். 2003ல், டி.ஐ.ஜி., அந்தஸ்தில் உள்ள உயர் போலீஸ் அதிகாரி என் வீட்டுக்கு வந்து, எனக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறினார். இதையடுத்து, எனக்கு துப்பாக்கி ஏந்திய இரண்டு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. வீட்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. "ஒய் பிளஸ்' பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டது. 2006, மே வரை இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டது.
பின் இந்த பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. 2008ம் ஆண்டு கட்சியில் இருந்து ராஜினாமா செய்தேன். இதையடுத்து, எனக்கு மிரட்டல் வந்தது. வீட்டை சேதப்படுத்தினர். தற்போது எனக்கு துப்பாக்கி ஏந்திய ஒரு போலீசும், வீட்டில் ஒரு போலீசும் பாதுகாப்புக்கு உள்ளனர். "ஒய்' பிரிவின்படி இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
எனக்கு வழங்கப்படும் போலீஸ் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்படும் என, நம்பத்தகுந்த வழிகள் மூலம், தகவல் வந்துள்ளது. "ஒய் பிளஸ்' பிரிவுப்படி, எனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்.
வக்கீல் பிரேம்நாத்: இவ்வழக்கில் என்னை இணைத்துக் கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.
வக்கீல் ஜோதி: அதில் எனக்கு ஆட்சேபனையில்லை.
அட்வகேட் ஜெனரல்: முக்கியமான தகவலை, மனுதாரர் மறைத்துள்ளார். போலீஸ் பாதுகாப்பு கோரி இவர் தாக்கல் செய்த மனு, ஏற்கனவே ஐகோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வேறு கட்சிக்கு சென்ற பின், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை.
நீதிபதி: இந்த வழக்கை, 9ம் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். பதில் மனுவை அரசு தாக்கல் செய்யட்டும். அதுவரை, தற்போது இருக்கும் பாதுகாப்பில் எந்த இடையூறும் செய்ய வேண்டாம். இறுதி விசாரணைக்குப் பின், கோர்ட் முடிவு செய்யும். பாதுகாப்பு ஆய்வுக் குழு எந்த முடிவெடுத்தாலும், 9ம் தேதி வரை நிறுத்தி வைக்க, அரசுக்கு நீங்கள் (அட்வகேட் ஜெனரல்) ஆலோசனை கூறுங்கள்.
இதையடுத்து, அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை, ஜூன் 10ம் தேதிக்கு நீதிபதி ராஜேஸ்வரன் தள்ளிவைத்தார். ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை, மறு உத்தரவு வரும் வரை தொடரவும் நீதிபதி ராஜேஸ்வரன் உத்தரவிட்டார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X