இந்தியர் ஓட்டுகளை பாக்., தீர்மானிப்பதா?: ஆதித்யநாத் ஆவேசம்| Dinamalar

இந்தியர் ஓட்டுகளை பாக்., தீர்மானிப்பதா?: ஆதித்யநாத் ஆவேசம்

Updated : பிப் 04, 2020 | Added : பிப் 04, 2020 | கருத்துகள் (64) | |
புதுடில்லி: டில்லி தேர்தலில் இந்தியர்கள் ஓட்டளிப்பதை பாக்., தீர்மானிக்கிறது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் பிப்.,08ல் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் பிப்.,11ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே டில்லி சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என பாக்., அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார்.
YogiAdityanath, Pakistan, DelhiElection2020, UP, CM, Delhi, ArvindKejriwal, யோகிஆதித்யநாத், உபி, முதல்வர், டில்லி, தேர்தல், பிரசாரம், அரவிந்த்கெஜ்ரிவால், பாகிஸ்தான், தொடர்பு, ஓட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: டில்லி தேர்தலில் இந்தியர்கள் ஓட்டளிப்பதை பாக்., தீர்மானிக்கிறது என உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளார்.

டில்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் பிப்.,08ல் நடக்கிறது. தேர்தல் முடிவுகள் பிப்.,11ம் தேதி வெளியாகிறது. இதற்கிடையே டில்லி சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடியை தோற்கடிக்க வேண்டும் என பாக்., அமைச்சர் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மோடி இந்தியாவின் பிரதமர் என்றும், பயங்கரவாதிகளின் தலையீட்டை பொறுத்துக்கொள்ள மாட்டோம் எனவும் பதில் கருத்து கூறினார். இந்நிலையில், பாஜ., வேட்பாளர்களை ஆதரித்து உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:


latest tamil news


காஷ்மீரில் 370 பிரிவு ரத்து செய்த விவகாரத்தில் பாக்., பிரதமர் இம்ரான் கான் மற்றும் கெஜ்ரிவால் ஒரே விதமாக கருத்து தெரிவித்ததை காணலாம். டில்லி தேர்தல் குறித்து பாக்., அமைச்சர் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக பேசியுள்ளார். இந்தியர்கள் யாருக்கு ஓட்டளிப்பது என்பதை பாகிஸ்தான் தீர்மானிக்கிறது. கெஜ்ரிவால் வெற்றிப்பெற்றால் பாக்., மகிழ்ச்சியடையும். அவர், கடந்த 5 ஆண்டுகளாக டில்லி மக்களின் உணர்வுகளில் விளையாடியுள்ளார். மாநில வளர்ச்சிக்கு அவர் தடையாக உள்ளார். தெரிந்தோ, தெரியாமலோ சமூகம் மற்றும் தேசத்திற்கு எதிரான பொம்மையாக உள்ளார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X