கோடி ரூபாய் இடம் தாரைவார்ப்பு! கொடிகட்டி பறக்கும் அதிகாரி 'டாப்பு'

Added : பிப் 04, 2020
Advertisement
கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள் மித்ரா. இதையறிந்த அவள் வீட்டுக்கு வந்த சித்ரா, ''ஏன்... மித்து, இன்னைக்கு காலேஜ்க்கு 'கட்' அடிச்சுட்டே...'' என்றாள்.''அலகுமலையில் ஜல்லிக்கட்டை, வெயிலில் உட்கார்ந்ததில், பயங்கர தலைவலி. அதான், லீவு எடுத்துட்டேன்,''டேபிள் மீதிருந்த செய்தித்தாளை புரட்டிய சித்ரா, ''பேசாம, கலெக்டரோட, சொந்தக்காரங்களாக
கோடி ரூபாய் இடம் தாரைவார்ப்பு! கொடிகட்டி பறக்கும் அதிகாரி 'டாப்பு'

கல்லுாரிக்கு செல்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து கொண்டிருந்தாள் மித்ரா. இதையறிந்த அவள் வீட்டுக்கு வந்த சித்ரா, ''ஏன்... மித்து, இன்னைக்கு காலேஜ்க்கு 'கட்' அடிச்சுட்டே...'' என்றாள்.''அலகுமலையில் ஜல்லிக்கட்டை, வெயிலில் உட்கார்ந்ததில், பயங்கர தலைவலி. அதான், லீவு எடுத்துட்டேன்,''

டேபிள் மீதிருந்த செய்தித்தாளை புரட்டிய சித்ரா, ''பேசாம, கலெக்டரோட, சொந்தக்காரங்களாக இருந்திருக்கலாம்,'' என, ஆதங்கப்பட்டாள்.''என்னக்கா.. என்ன மேட்டர், இப்படி சலிச்சுக்கிறீங்க?''

''ஆமான்டி, வேற என்ன பண்றது. திருப்பூர் சிட்டிக்குள்ளே, ஒரு நபருக்கே, 6.50 சென்ட் நிலத்துக்கு பட்டா கொடுத்திருக்காங்க,''

''அடேங்கப்பா.. மதிப்பு கிட்டத்தட்ட, ஒரு கோடி இருக்குமே!''

''யெஸ்... கரெக்ட். நார்த் தாலுகா லிமிட்டில், ராயபுரம் ஏரியாவுல, 'மாஜி' கலெக்டர் சொந்தக்காரருக்கு, 6.5 சென்ட் பட்டா போட்டு கொடுத்திட்டாங்க. இதுக்காக, சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு, ஏழு லட்சம் கை மாறிடுச்சாம்,''

''இந்த விவகாரத்த தெரிஞ்சுகிட்ட, சிலர் தகவல் சேகரிச்சுட்டு இருக்காங்க. புகார் கொடுத்த வேலை நடக்காதுன்னு, நேரடியா கோர்ட்டுக்கே போயிடலாம்னு 'மூவ்' பண்றாங்களாம்,''

''கரெக்ட்தாங்க. யாரா இருந்தா என்ன? சட்டம் எல்லாருக்கும் பொதுதானே,'' என்று சொன்ன மித்ரா, சித்ராவுக்கு லெமன் டீ கொடுத்தாள்.

அதை பருகிக்கொண்டே சித்ரா, ''சிசிடிவி' கன்ட்ரோல் ரூம்னு கட்டினாங்க, இப்ப பழக்கடையா மாறிடுச்சு...'' என்றாள்.

''அடடா... இப்படியும் ஒரு வருமானமா?''

''திருப்பூர் தினசரி மார்க்கெட் வளாகத்துல, 'சிசிடிவி' கேமரா பொருத்தி, தொடர்ந்து கண்காணிக்கலாம்னு முடிவு பண்ணியிருந்தாங்க. அதுக்காக, மார்க்கெட் வளாகத்தில, கன்ட்ரோல் ரூம் கட்டினாங்க. 'சவுத்'தோட, தோஸ்த் ஒருத்தர், அந்த கடைகளை, வாடகைக்கு விட்டு, காசு பார்க்கிறாராம். இதுதான், கன்ட்ரோல் ரூம், பழக்கடையா மாறிய கதை!'' என சிரித்தாள் சித்ரா.

''அக்கா... தி.மு.க.,வினர், அரசியலில் ஆடு புலி ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாங்களாம்,

'தி.மு.க., கட்சிய சேர்ந்த பஞ்., தலைவருங்க, இப்ப இருந்தே அரசியல் ஆட்டத்த துவக்கிட்டாங்க...'' என்றாள் மித்ரா.

''அட... புரியற மாதிரி சொல்லுடி''

''தி.மு.க., சார்பில், ஜெயிச்ச உள்ளாட்சி பிரதிநிதிகள், அவர்களின் ஏரியாவில், 'அ.தி.மு.க., ஆட்சியில, மோசமான நிர்வாகம் செஞ்சு, கடனில் மூழ்கிட்டு இருக்குது'னு, பிரசாரம் செய்றாங்களாம். ஆனா, மூன்றரை வருஷமா, அதிகாரிகள் ராஜ்ஜியமா இருந்தது, அவங்களுக்கு தெரியலையான்னு, ஆளுங்கட்சியினரும், பதிலடி கொடுக்கிறாங்களாம்,''''சபாஷ்... சரியான போட்டினு சொல்லு,'' என்ற சித்ரா, ''லாட்டரி வியாபாரிகள், டிரைவர்களோட தொடர்பில் இருக்காங்களாம் தெரியுமா?,''என கேட்டாள்.

''தெரியாதுங்க்கா...''

''திருப்பூர் சிட்டியில், போலீஸ் அதிகாரிக்கு ஜீப் ஓட்டும் சிலர், லாட்டரி, கஞ்சா விற்கிற ஆட்களோடு 'டச்'சில் இருக்காங்களாம். இவங்கதான், மாமூல் வாங்கி, அதிகாரிகளுக்கு கொடுக்கிற வேலையை கனகச்சிதமா செய்றாங்களாம்,''

''அப்படின்னா, இவங்களைத்தான் மொதல்ல களையெடுக்கணும்போல,'' கோபமாக மித்ரா,

''இ-சலான் மெஷின் வந்தும்கூட, சளைக்காம வசூல் பண்ணிடறாங்களாம்,'' என, அடுத்த தகவலையும் கூறினாள்.

''அதெப்படி பண்ண முடியும்,'' கேள்வி கேட்டாள் சித்ரா.

''சொல்றேன் கேளுங்க. பல்லடம் ரோட்டில, போதையில் வந்த வாலிபர்களை பிடித்து 'பைன்' போட்டாங்க. அவங்க 6 ஆயிரம் பணம் கட்டியதும், அனுப்பி வச்சிட்டாங்களாம்,''

''அட... மித்து. எவ்ளோ டெக்னாலஜி வந்தாலும், சுருட்றவங்க, எப்படியும் சுருட்டிட்டுத்தான் இருப்பாங்க. அவங்களா, திருந்தினால்தான் உண்டு,''

''அது உண்மைதாங்க்கா. இதேமாதிரி, உடுமலையில் நிறைய இடங்களில், கஞ்சா பஞ்சமில்லா கிடைக்குதாம். அதிலயும், ஸ்கூல், காலேஜ் பக்கத்தில வைச்சு, ஸ்டூடண்ட்ஸ்க்கு ஓபனா சப்ளை செய்றாங்க,''

''அடக்கொடுமையே, இது போலீசுக்கு தெரியாதா?''

''எல்லாம் தெரியும்படி. செமத்தியா வாங்கிட்டுத்தான், விற்க விடறாங்களாம். ஐ.எஸ்., துவங்கி, அதிகாரி வரைக்கும், 'சலான்' போறதால, யாரும் கண்டுக்கறதில்லை. இதனால, நிறைய ஸ்டூடண்ட்ஸ் போதைக்கு அடிமையாயிட்டு வர்றாங்களாம்,''

''ஆளுங்கட்சி கொடி கட்டாதது பாக்கி. சட்ட விரோதமா 'காசு' பார்த்திட்டு, 'டாப்'பில் இருக்கிற அதிகாரிகளை களை எடுத்தால் மட்டுமே சரியாயிருக்கும்,''ஆவேசமாக பேசினாள் மித்ரா.

''அட... அந்த அதிகாரி எப்படியோ. இங்க பாரு. பொங்கலுார் மண் கடத்தல், வி.ஏ.ஓ.,வை, ஆர்.ஐ., மிரட்டிய ஆடியோ குறித்து, கலெக்டரின் கவனத்துக்கு போனதும், 'செம காண்டு' ஆயிட்டாராம். 'எந்த அடிப்படையில், மணல் கட

த்தல் லாரிகளை, ஆர்.ஐ., ரிலீஸ் செஞ்சார். உடனே 'சஸ்பெண்ட்' பண்ணுங்க சொல்லி, பண்ணிட்டாங்க,''

''அடடே.. அப்புறம் என்னாச்சு?''

''ஆர்.டி.ஓ., என்கொயரியில், மணல் கடத்தல் விவகாரத்தில், தாசில்தார் வரை 'கவனிச்சது' தெரிஞ்சிருச்சு. இந்த மேட்டரில், புதுக்கோட்டையை சேர்ந்த ஆளுங்கட்சியின் முக்கியப்புள்ளிதான் காரணகர்த்தாவாம். இவர், ஸ்டேட் முழுக்க மண், மணல், எடுக்க 'டெண்டர்' எடுத்து, மணலை வச்சு பலப்பல கோடி சம்பாதிச்சுட்டாராம்,''

''தமிழ்நாட்டில யாரும் மண் டெண்டர் எடுத்தாலும், இவருக்கு 'கப்பம்' கட்டியே ஆகோணுமாம். பல முக்கிய புள்ளிகளோட, ஆசீர்வாதத்தில், 'பணக்கோலமே' போடறாராம்,''

''ஆமாமா... இந்த நெட்வொர்க் பல வருஷமா தொடருது. என்னதான், கோர்ட் கிடுக்கிப்பிடி போட்டாலும், தப்பு செய்றவங்க செஞ்சுட்டுத்தான் இருக்காங்க,'' என்ற சித்ரா தண்ணீர் குடித்து விட்டு, ''அங்கே மண்ணால் சிக்கல். இங்கே பெண்ணால் சிக்கல்,''

சிரித்து கொண்டே சொன்னாள்.''என்னங்கா... விசு மாதிரி டயலாக் பேசறீங்க?''

''இருடி, விளக்கமா சொல்றேன். மடத்துக்குளம் ஸ்டேஷன் பக்கத்தில, பாழடைஞ்ச போலீஸ் குடியிருப்பு உள்ளது. அதை தனது 'கெஸ்ட் ஹவுஸா' மாத்திட்டு, ஒரு குட்டி அதிகாரி ஜாலியாக இருந்திருக்கிறார். போன வாரம், ஒரு பெண்ணிடம் அத்துமீற முயற்சித்துள்ளார்,''

''இதை தெரிஞ்சுகிட்டஎஸ்.பி., சம்பந்தப்பட்ட நபரை, ஏ.ஆர்., போலீசுக்கு மாத்திட்டாங்க. மண்ணானலும் சரி... பெண்ணானலும் சரி... ஒழுங்கா நடக்கலைன்னா, இப்படித்தான் ஆகும்,'' என்று சொன்ன மித்ரா, சித்ராவின், கைகளை குலுக்கியபடி ''சூப்பரா, அதுவும் ரொம்ப கரெக்டா சொன்னீங்க,''என, பாராட்டினாள்.

''ஓ.கே., ஓ.கே., ரொம்ப ஐஸ் வைக்காதடி. குளிர் சீசனில், காய்ச்சல் வந்துடும்,'' என சிரித்தவாறே, ஹெல்மெட்டை கையில் எடுத்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X