வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா (எம்.என்.எஸ்.,) கட்சி தலைவர் ராஜ்தாக்கரே, குடியுரிமை சட்டத்தை முதலில் எதிர்த்து வந்தார். 'இந்தியாவுக்கு விஸ்வாசமாக இருக்கும் முஸ்லிம்கள் நம்முடையவர்கள்' என பேசியிருந்தார். ஆனால் சமீபத்தில் அவர் பேசுகையில், குடியுரிமை திருத்த சட்டம் மூலமாக இந்தியாவிற்குள் சட்ட விரோதமாக வந்துள்ள வங்கதேச நாட்டினர்களை வெளியேற்றும் மத்திய அரசின் நடவடிக்கைக்கு முழு ஆதரவு அளிப்பதாக கூறினார்.

இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் ராய்காட் மாவட்டத்தின் பெரும் பகுதியில் ராஜ்தாக்கரே மற்றும் அவரது மகன் அமித் தாக்கரே அடங்கிய போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. அந்த போஸ்டரில், எம்.என்.எஸ். விடுக்கும் எச்சரிக்கை. நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவிய வங்கதேசத்தினர் இந்தியாவை விட்டு உடனடியாக வெளியேற வேண்டும். இல்லையெனில், எங்கள் பாணியில் தூக்கி வீசப்படுவீர்கள், என்ற வாசகத்துடன் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது. இந்த போஸ்டர் நகர் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE