சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : பிப் 04, 2020
Advertisement
 பேச்சு, பேட்டி, அறிக்கை

'அதாவது, ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பிற்கு, பொதுத் தேர்வு நடத்துவதன் மூலம் என, நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளலாமா...' என, கேட்கத் தோன்றும் வகையில், செய்தித்துறை அமைச்சர் ராஜு பேச்சு: அரசு நிதியில், நான்கில் ஒரு பங்கு, கல்விக்காக செலவிடப்படுகிறது. அனைத்து விதமான தேர்வு முறைகளையும், மாணவர்கள் எளிதில் கையாளும் வகையில், கற்பிக்கும் முறையில் மாற்றங்களை கொண்டு வந்து, தமிழக அரசு அவர்களைத் தயார்படுத்தி வருகிறது.

'இறைவனே இல்லை என்கின்றனரே சிலர். அப்போ, அவர்கள் கதி என்னவாகும்...' என, எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில், நீதிபதி ஆர்.மகாதேவன் பேச்சு: மனிதனாக பிறந்த ஒருவன், அவன் வாழ்கின்ற வாழ்க்கையையும், பிறந்ததன் பலனையும் அடைய வேண்டும் என்றால், இறை என்னும் ஆனந்தத்தை தரிசிக்கக் கூடிய தன்மை மிக்கவராக, வாழ்க்கையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

'இதுவரை, எந்த பட்ஜெட்டையாவது, இந்திய கம்யூனிஸ்ட் பாராட்டி இருக்கிறதா என்றால், இல்லை என்பது தான் பதிலாக வரும்...' என, சொல்லத் தோன்றும் வகையில், இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் அறிக்கை: மத்திய பட்ஜெட், வழக்கம் போல, பா.ஜ.,வின் குருபீடம் இட்ட கட்டளையை நிறைவேற்றும் வகையில் தான் உள்ளது. எனினும், குருபீடத்தின் மீதான விசுவாசத்தை மறைத்து, நாட்டு மக்கள் பிரச்னைகளை தீர்வு காண முயற்சிப்பது போல, நீலிக்கண்ணீர் வடிக்கிறது.

'சிறையிலிருக்கும் உங்கள் அக்காள், இதைக் கேட்டால், மிகவும் வருத்தமடைய மாட்டாரா...' என, கேட்கத் தோன்றும் வகையில், அண்ணா திராவிடர் கழக பொதுச் செயலர் திவாகரன் பேட்டி: தினகரன் துவக்கியுள்ள, அ.ம.மு.க.,வால், அ.தி.மு.க., அல்லது தி.மு.க.,வை எதிர்த்து போட்டியிட முடியாது. எல்லா வகையிலும், தமிழர்களுக்காக, தி.மு.க., குரல் கொடுத்து வருகிறது. 2021 சட்டசபை தேர்தலில், தி.மு.க., தான் வெற்றி பெறும்.

'பா.ஜ.,வைச் சேர்ந்த சுப்ரமணிய சாமியும் தான், அருண் ஜெட்லி, நிர்மலா சீதாராமன் போன்றோருக்கு, பொருளாதாரம் தெரியாது என்கிறார். அதற்காக, அவர்கள் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளை பயனற்றவை என சொல்ல முடியுமா...' என, கிடுக்கி போடும் வகையில், பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா பேட்டி: காங்கிரசை சேர்ந்த, முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம், பொருளாதாரம் படித்தவர் இல்லை. அவர் தாக்கல் செய்த அனைத்து மத்திய பட்ஜெட்டுகளும், பயனற்றவை. பொருளாதாரம் பற்றி அறவே தெரியாத சிதம்பரம், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டை குறை கூறக் கூடாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X