சிறப்பு பகுதிகள்

டவுட் தனபாலு

டவுட் தனபாலு

Added : பிப் 04, 2020 | கருத்துகள் (3)
Advertisement
 டவுட் தனபாலு

இயக்குனர் பாரதிராஜா: வெள்ளைக்காரர்கள், நம் நாட்டை ஆள்வதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியாதோ அதுபோல, ரஜினி ஆள நினைப்பதையும் ஏற்றுக் கொள்ள முடியாது. 'நான் ஒரு தமிழ்நாட்டுக்காரர்' என, ரஜினி சொன்னாலும், அவர் வாழ வந்தவர்; தமிழர் இல்லை.

'டவுட்' தனபாலு: 'நீங்க தான், தமிழகத்தில், யார் யாருக்கு குடியுரிமை கொடுக்கலாம் என, முடிவு செய்பவரா... உங்கள் பேச்சை, உங்கள் வீட்டில் உள்ளோரே கேட்க மாட்டார்கள்; எதற்கு இந்த வீண் பிதற்றல்? உங்களைப் போல, பிற மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் இருப்போர், தமிழரை விரட்டி விட்டால், இங்கு வந்து, உங்களின், முதல் மரியாதையைத் தான் பார்த்துட்டு இருக்க வேண்டும். வயதான காலத்தில், வாய்க்கு வந்தபடி பேசாமல், நன்கு ஓய்வு எடுங்கள்' என, தமிழகம் முழுக்க குரல் ஒலிக்கிறதே; கேட்கவில்லையோ என்ற, 'டவுட்' ஏற்படுகிறது!

தமிழக பா.ஜ., பொதுச் செயலர் நரேந்திரன்: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக செயல்படுவோர் மீது, தமிழகத்தில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படுகிறது. போலீசில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. 'தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கிறது' என, முதல்வர் அடிக்கடி கூறி வருகிறார். அதைக் கெடுக்க திட்டமிட்டு, சதி நடக்கிறது.

'டவுட்' தனபாலு: 'தமிழகத்தில் பூரண அமைதி நிலவ, மூன்று விஷயங்களைச் செய்ய வேண்டும். முதல்வர் பதவியை ஸ்டாலினிடம் கொடுத்து விட வேண்டும்; கோவில்களை மூடி, ஈ.வெ.ரா.,வின் கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்; தனியார் நிறுவனங்களை எல்லாம், கம்யூனிஸ்ட்கள் கையில் ஒப்படைத்து விட வேண்டும்' - இப்படித் தான், சில கட்சியினர் எதிர்பார்க்கின்றனர். தமிழர்கள் என்ன இளிச்சவாயர்களா, இவர்கள் எதிர்பார்ப்பதை செய்ய... இந்த மூன்று தரப்பினரையும், மக்கள் எப்போதுமே ஏக்கத்திலேயே வைத்திருப்பர் என்பதில் மட்டும், 'டவுட்'டே கிடையாது!

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்: மதுரை அடுத்த கீழடியில், தமிழக தொல்லியல் துறை நடத்திய ஆராய்ச்சியில், 'கீழடி தமிழர் நாகரிகம், 2,600 ஆண்டுகள் பழமையானது' என்பது தெரிய வந்துள்ளது. ஆனால், ஆதிச்சநல்லுார் நாகரிகம், அதை விட பழமையானது. எனவே, ஆதிச்சநல்லுார் தொல்லியல் ஆய்வறிக்கையை, தொல்லியல் துறை விரைவாக வெளியிட வேண்டும்.

'டவுட்' தனபாலு: அதை, அகழ்வாராய்ச்சியாளர்கள் பார்த்துக் கொள்வர்... நாம, நம்ம மக்கள் பிரச்னையில் கவனம் செலுத்துவோம்... நீர்நிலைகள் சரியாகப் பராமரிக்கப்படுகின்றனவா, விவசாயம் சிறப்பாக இருக்கிறதா, அரசு வீண் செலவு செய்யாமல் இருக்கிறதா என்பதில் மட்டும் நாம் கவனம் செலுத்தினால் போதும் என்பதில், 'டவுட்'டே இல்லை... செய்வீர்களா?

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Kumar - Manama,பஹ்ரைன்
05-பிப்-202016:20:23 IST Report Abuse
Muthu Kumar ஜனநாயக நாட்டில் இருந்து கொண்டு இவ்வாறு பேசுவது சரியில்லை. மக்களாட்சி என்பது மக்கள் ஆதரவு யாருக்கோ அவரே தலைமைக்கு வர முடியும். முதலில் மாற்றங்களை மக்களிடம் கொண்டுவாருங்கள். அடுத்த மாநிலங்களில் அவ்வாறு இருக்கிறது என்றால்,, அந்த மக்கள் அடுத்தவனுக்கு ஒட்டு போட மாட்டார்கள்.. சோ உங்களது பாதையை மாற்றிக் கொள்ளுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Siva Prakasam - Chennai,இந்தியா
05-பிப்-202006:52:22 IST Report Abuse
Siva Prakasam 1 .உங்கள் பேச்சை, உங்கள் வீட்டில் உள்ளோரே கேட்க மாட்டார்கள் எதற்கு இந்த வீண் பிதற்றல்? 2 அதை, அகழ்வாராய்ச்சியாளர்கள் பார்த்துக் கொள்வர்.
Rate this:
Share this comment
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
05-பிப்-202006:03:34 IST Report Abuse
D.Ambujavalli சுதந்திரம் கிடைத்தது முதல் இருந்த எத்தனை முதல்வர்கள் பச்சைத் தமிழர்கள்? அவர்கள் நிர்வாகத்தில் என்ன குறைந்தவர்கள்? ஏன், கர்நாடகாவில் பிறந்து சினிமாவுக்காக தமிழகம் வந்த சந்தியாவின் திருமகளாரை கன்னடியர் என்று குறிப்பிட்டவர்கள் எத்தனை பேர்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X