கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சச்சின், சானியா மிர்சாவுக்கு எதிரான மனு தள்ளிவைப்பு : ஐகோர்ட் கிளை உத்தரவு

Added : மே 27, 2011
Advertisement

மதுரை : தேசியக் கொடியை அவமதித்ததாக கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, வர்ணனையாளர் மந்திரா பேடி மீது வழக்கு பதிய கோரிய மனுவை அரசு தரப்பு கேட்டதையடுத்து, ஜூன் 6ம் தேதிக்கு மதுரை ஐகோர்ட் கிளை தள்ளி வைத்தது. மதுரை எட்டிமங்கலத்தைச் சேர்ந்த வக்கீல் ஸ்டாலின் தாக்கல் செய்த மனுவில், ""சண்டிகரில் நடந்த இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியின் போது, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலைச் சேர்ந்த பெண்கள், தேசியக் கொடியை அவமரியாதை செய்துள்ளனர். மேலும், ஜமைக்காவில் தேசியக்கொடி கலரில் தயாரிக்கப்பட்ட பிறந்த நாள் கேக்கை, கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வெட்டியதன் மூலம் அவமரியாதை செய்துள்ளார். சானியா மிர்சா மாடலிங் செய்யும்போது, காலுக்கு அடியில் தேசியக் கொடி இருந்தது. மந்திரா பேடி, தேசியக் கொடி கொண்ட சேலை கட்டி அவமரியாதை செய்துள்ளார். அவர்கள் மீது வழக்கு பதிய உத்தரவிட வேண்டும்,'' என கோரினார். மனு நேற்று நீதிபதி செல்வம் முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் மகேந்திரன் இதுகுறித்து அதிகாரிகளிடம் விளக்கம் பெற அவகாசம் கோரினார். அதை ஏற்று மனுவை, ஜூன் 6ம் தேதிக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X