சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

'காமெடி' காட்சிகளில் நடிக்க ரஜினி விரும்புவார்!

Added : பிப் 04, 2020 | கருத்துகள் (2)
Advertisement
 'காமெடி' காட்சிகளில் நடிக்க ரஜினி விரும்புவார்!

பிரபல நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், மோகன்லால், விஜய் போன்றோருடன் நடித்துள்ள நடிகை நிவேதா தாமஸ்: நான் மலையாளி தான் என்றாலும், பிறந்தது, வளர்ந்தது எல்லாம் சென்னை தான். குழந்தை நட்சத்திரமாக, சின்னத்திரையில் ஆரம்பித்த என் பயணம், வெள்ளித்திரையில் தொடர்கிறது.

வீட்டில், நான் தான் மூத்த பொண்ணு; அதனால், செல்லம் கொஞ்சம் ஜாஸ்தி. சாப்பாட்டை ருசித்து சாப்பிடுற ஆள் நான். எந்த ஊரில், என்ன உணவு ஸ்பெஷல் என தெரிந்து கொண்டு, அதை தேடித் தேடி சென்று, சாப்பிட்டு மகிழ்வேன். 'உன் வாழ்க்கையில் எந்த ஒரு நாளையும் வீணாக்க கூடாது. முடிந்த வரை மற்றவர்களை காயப்படுத்தாமல், சந்தோஷமாக இரு. ஒவ்வொரு நாளையும், மறக்க முடியாததாக வைத்துக் கொள்' என, என் தந்தை, எனக்கு அறிவுரை கூறியுள்ளார்; அதன்படி நடக்கிறேன்.

நடிகர் கமலின், பாபநாசம் படத்தில், அவர் மகளாக நடித்த எனக்கு, நடிகர் ரஜினி காந்துடன், தர்பார் படத்திலும், அவரின் மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை எண்ணி வியக்கிறேன். ரஜினியுடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்பது தான், சினிமா நடிகைகளின் அதிகபட்ச ஆசையாக இருக்கும். எனக்கு, 23 வயதிலேயே அந்த ஆசை நிறைவேறி விட்டது.தர்பார் படத்திற்காக, அவருடன், 45 நாட்கள் நடித்தேன். முதல் நாள் ஷூட்டிங்கில், ரஜினியை பார்த்தது முதல், படப்பிடிப்பு முடியும் வரை, அவரை அப்பாவாகத் தான் பார்த்தேன்.

கடைசி நாள் ஷூட்டிங்கின் போது தான், 'அவருடன் ஒரு போட்டோ கூட எடுக்கவில்லை' என்பதை உணர்ந்தேன். ரஜினியிடம், தயக்கத்துடன் கேட்டேன். 'அப்படியா...' என, ஆச்சர்யமாக கேட்டார். 'வாடா கண்ணா'னு சொல்லி, 'செல்பி' படம் எடுத்துக் கொள்ள அனுமதித்தார். அந்த போட்டோவை, ரொம்ப பத்திரமாக வைத்திருக்கிறேன்.நான் பார்ப்பதற்கு, ரஜினியின் மகள்கள் போலவே இருப்பதாக, ரசிகர்கள் கூறுகின்றனர்.

அதனால், அவர் மீது, 'அப்பா பீலிங்' அதிகமாக வந்து விட்டது. தர்பார் படம் பார்த்த பலரும், அதில் என் நடிப்பை பார்த்து, தங்களுக்கும் அது போன்ற மகள் வாய்க்கவில்லையே என, பலர் வருத்தப்பட்டனர் என கேள்விப்பட்டேன். அந்த மந்திரக் காட்சிகளுக்கு, ரஜினி - இயக்குனர் முருகதாஸ் காம்பினேஷன் தான் காரணம்.ரஜினிக்கு, மற்ற காட்சிகளை விட, காமெடி காட்சிகளில் நடிப்பது தான், மிகவும் பிடிக்கிறது.

காமெடி சீன் பண்ணும் போது, ரொம்ப சந்தோஷம் ஆகி விடுவார். அவர், விதவிதமாக சாப்பிட ஆசைப்படுபவர்.அவருக்கு, என் கையால் ஒரு நாள் சமைத்து கொடுக்க விரும்புகிறேன். என் ஆசை நிறைவேறும் என, நம்புகிறேன்!

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chakra - plano,யூ.எஸ்.ஏ
05-பிப்-202017:43:05 IST Report Abuse
chakra பரட்டை பணம் கொடுத்தால் என்ன வேண்டுமானாலும் செய்யும் இதுக்கு என்னவோ ஆஸ்கார் ரேஞ்சுக்கு பில்ட்டப்பு
Rate this:
Share this comment
Cancel
Subramanian Arunachalam - CHENNAI,இந்தியா
05-பிப்-202012:12:58 IST Report Abuse
Subramanian Arunachalam நீங்கள் இப்போதே குடமிளகாய் மூக்கன் பாரதி ராஜாவிடம் இருந்து நீங்கள் தமிழர் தான் என்று ஒரு சான்று பத்திரம் வாங்கி வைத்து கொள்ளவும் ஒரு முப்பது ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் தமிழக முதல்வராக ஆவதற்கு வாய்ப்பு வரும் போது அப்போது யாரவது மன நிலை சரி இல்லாத ஒருவர் நீங்கள் தமிழர் அல்ல என்ற கச்சேரி ஆரம்பிக்கலாம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X