பொது செய்தி

இந்தியா

உறுதி! மக்கள்தொகை பதிவேடு குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தது மத்திய அரசு

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 04, 2020 | கருத்துகள் (27)
Advertisement
NPR,NationalPopulationRegister,aadhar,parliament,Govt,வதந்தி,முற்றுப்புள்ளி,மத்திய_அரசு,தேசியமக்கள்தொகைபதிவேடு

புதுடில்லி : எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, 'என்.பி.ஆர்., எனப்படும் தேசிய மக்கள் தொகை பதிவேடு குறித்த விபரங்களை சேகரிக்கும்போது, பொதுமக்களிடம் எந்தவிதமான ஆவணங்களும் கேட்கப்படாது. விருப்பம் இருந்தால், ஆதார் எண் குறித்த தகவல்களை தரலாம்' என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாட்டில் வசிக்கும் அனைத்து குடிமக்கள் குறித்த விபரங்கள் அடங்கிய பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு என அழைக்கப்படுகிறது. 'ஒரு குறிப்பிட்ட பகுதி யில், ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வாழ்ந்தவர்கள் அல்லது குறிப்பிட்ட பகுதியில், அடுத்த ஆறு மாதங்கள் அல்லது அதற்கு மேற்பட்ட காலம் வாழ விரும்புவோர் பற்றிய தகவல்கள் அடங்கிய பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு' என, மத்திய அரசு தரப்பில், இதற்கு விளக்கம் அளிக்கப்பட்டது.


அமைச்சர் விளக்கம்


கடந்த, 2010ல், தேசிய மக்கள் தொகை பதிவேடை உருவாக்கும் முயற்சிகள் துவங்கின. அதற்கு பின், 2011ல், மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, வீடு வீடாகச் சென்று, தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான விபரங்கள் சேகரிக்கப்பட்டன. இதற்கு பின், 2010ல், இந்த பதிவேடு புதுப்பிக்கப்பட்டு, டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. இந்த பதிவேடு, கிராமம், நகரம், மாவட்டம், மாநில அளவில் தயார் செய்யப்படும். இந்நிலையில், இந்த மக்கள் தொகை பதிவேடை புதுப்பிக்கும் பணியை, வரும், ஏப்ரல் - செப்டம்பரில், அசாம் மாநிலத்தை தவிர, மற்ற மாநிலங்களில் செயல்படுத்த, மத்திய அரசு முடிவு செய்தது.

காங்கிரஸ், திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கூறியதாவது: தேசிய குடிமக்கள் பதிவேடு விஷயத்தில், மாநில அரசுகள் உஷாராக இருக்க வேண்டும். இது குறித்த விபரங்கள் சேகரிக்கப்படும்போது, பெற்றோரின் பிறந்த தேதி, அதற்கான ஆதாரங்கள் போன்ற விபரங்கள் கேட்கப்பட உள்ளன. தேசிய குடியுரிமை பதிவேட்டை அமல் படுத்துவதற்கு முன்னோட்டமாக, இந்த ஆபத்தான விளையாட்டை மத்திய அரசு விளையாடி பார்க்க, நினைக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில், எதிர்க்கட்சியினர் அனைவரும் ஒன்று திரண்டு, தேசிய குடிமக்கள் பதிவேடை அமல்படுத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 'எந்த மாநில அரசும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாம்' என, அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். கேரளா உள்ளிட்ட மாநில அரசுகளும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தப் போவது இல்லை என, அறிவித்தன. இந்நிலையில், லோக்சபாவில் நேற்று, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய், இந்த விவகாரம் குறித்து, எழுத்து மூலமாக விளக்கம் அளித்தார். அவர் கூறியுள்ளதாவது:

தேசிய மக்கள் தொகை பதிவேடுக்கான தகவல்களை சேகரிக்கும்போது, எந்தவிதமான ஆவணங்களும் மக்களிடம் கேட்கப்படாது. ஆதார் எண் போன்ற விபரங்களை, பொதுமக்கள் விரும்பினால் தரலாம். மக்கள் தொகை பதிவேடுக்கான பணிகளை துவங்குவது குறித்து, மாநில அரசுகளிடம் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.


ஒத்துழைக்க வேண்டும்


இந்த நடவடிக்கையின் போது, பொதுமக்களின் பெயர், வயது, பாலினம், குழந்தைகள், தொழில், வருமானம் உள்ளிட்ட விபரங்கள், சேகரிக்கப்பட்டு, புதுப்பிக்கப்படும். இது குறித்த தகவல்களை சேகரிக்கும் ஊழியர்களுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். யாருடைய குடியுரிமை குறித்தாவது சந்தேகம் எழுந்தால், அதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளப்படாது. தேசிய அளவிலான மக்கள் தொகை பதிவேடு நடைமுறைகளை மேற்கொள்வது குறித்து, அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


டில்லியில் வன்முறை


லோக்சபாவில் நேற்று, மத்திய உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக டில்லி யில் நடக்கும் போராட்டங்களில் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுகிறது. சட்டவிரோதமாக கூடுதல், கல்வீசி தாக்குதல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்துதல் போன்ற வன்முறைகள் அரங்கேறுகின்றன. இது தொடர்பாக டில்லியில் மட்டும், 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

99 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கேரளா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநில அரசுகள், குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. அந்த மாநில அரசுகளுக்கு எதிராக, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.


குடியுரிமை பதிவேடு அவசியம்


லோக்சபாவில் நேற்று, பா.ஜ., - எம்.பி.,நிஷிகாந்த் துபே பேசியதாவது: தேசிய குடியுரிமை பதிவேடு திட்டத்தை தேசிய அளவில் அமல்படுத்த வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை வைக்கிறேன். இதன் மூலம், மதத்தின் அடிப்படையில் அரசியல் செய்யும் நடைமுறைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்களின் பெயரில், இங்கு சில கட்சிகள், அரசியல் செய்கின்றன. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ashak - jubail,சவுதி அரேபியா
07-பிப்-202002:52:13 IST Report Abuse
ashak ஆதார் எண்ணை வைத்து மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தவேண்டியது தானே
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
06-பிப்-202003:43:24 IST Report Abuse
J.V. Iyer தேச விரோதிகள், இந்த எதிர் கட்சிகள். 'துக்டே துக்டே கேங்க்'
Rate this:
Share this comment
Cancel
Ram Sekar - mumbai ,இந்தியா
05-பிப்-202020:51:05 IST Report Abuse
Ram Sekar இல்லை. ஆதார் அல்லது ஏதாச்சும் அடையாள அட்டை காண்பித்தே ஆகவேண்டும். மாட்டேங்கிறவங்களின் குடியுரிமையை ரத்து செய்யுங்கள். முதலில் இத்தாலிய கொள்ளை குடும்பம், கட்டுமரம் குடுமபம், குருமா கூட்டம் - இவர்களின் குடியுரிமையை ரத்து செய்யுங்க. உண்மையான இந்தியன் என்று சொல்லிக்கொண்டு இங்கு கருத்து போடும் மூர்க்க கூட்டணி ஆட்களின் குடியுரிமையியை ரத்து செய்யுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X