மோடிக்கு எதிரான வழக்கில் ஏப்., 14ல் விசாரணை

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 04, 2020 | கருத்துகள் (6)
Advertisement
PM,Modi, Supremecourt, மோடி, பிரதமர், சுப்ரீம்கோர்ட், வழக்கு, விசாரணை

புதுடில்லி : குஜராத்தில், 2002ல் நடந்த கலவரத்தில், அப்போது குஜராத் முதல்வராக இருந்த, பிரதமர் நரேந்திர மோடிக்கு தொடர்பில்லை என, சிறப்பு விசாரணை குழு அறிவித்ததை எதிர்க்கும் வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்றத்தில், ஏப்., 14ல் நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


கலவரம்


குஜராத்தில் முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. இங்கு, 2002ல், சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் ஒரு பெட்டிக்கு தீ வைக்கப்பட்டது. அதில், அயோத்தி சென்று திரும்பிய கரசேவகர்கள் கொல்லப்பட்டனர். அதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கலவரம் வெடித்தது. குல்பர்க் சொசைட்டி பகுதி யில் நடந்த கலவரத்தில், அப்போது, எம்.பி.,யாக இருந்த ஈஷான் ஜாப்ரி உட்பட, 68 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த கலவரங்கள் தொடர்பாக விசாரிக்க, சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. அப்போது குஜராத் முதல்வராக இருந்த, பிரதமர் நரேந்திர மோடி உட்பட, 64 பேருக்கு, இந்த வழக்கில் தொடர்பு இல்லை என்று அறிக்கை தாக்கல் செய்து, விசாரணையை முடித்து கொண்டது. வழக்கில் இருந்து மோடி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து, ஈஷான் ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி வழக்கு தொடர்ந்தார். அதை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், 2018ல் வழக்கு தொடர்ந்தார்.


நிலுவை


இந்த வழக்கு, நீதிபதிகள் ஏ.எம்.கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது: இந்த வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் உள்ளது. எப்படியும் ஏதாவது ஒரு நாள் விசாரித்துதான் ஆக வேண்டும். அதனால், ஏப்., 14ல் விசாரணை நடைபெறும். இவ்வாறு, அமர்வு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Dhanbad,இந்தியா
05-பிப்-202022:52:46 IST Report Abuse
Nallavan Nallavan வேண்டுமென்றே செய்திருந்தாலும் களையெடுத்ததற்கெல்லாம் தண்டனையா கொடுப்பார்கள் ????
Rate this:
Share this comment
Cancel
Anand - chennai,இந்தியா
05-பிப்-202012:07:01 IST Report Abuse
Anand தூண்டிவிட்டு குளிர் காயும் பாகிஸ்தான் முஸ்லீம் லீகின் இந்திய கிளை கான் - கிராஸ் கட்சியை தடை செய்யவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
blocked user - blocked,மயோட்
05-பிப்-202007:44:01 IST Report Abuse
blocked user செத்த பாம்பை எவ்வளவு நாளுக்குத்தான் அடிப்பார்கள்? மோடி என்பதால் கலவரத்தை கட்டுப்படுத்தி அமைதியை நிலை நாட்டினார். கமல்நாத் போன்ற காங்கிரஸ் குப்பைகள் என்றால் இன்னும் உயிர்ப்பலி ஏராளமாக இருந்திருக்கும். இதற்க்கு முன் நடந்த பல மாநிலங்களில் நடந்த கலவரங்களில் உயிர்ப்பலி இதைவிட அதிகம்.
Rate this:
Share this comment
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
05-பிப்-202008:25:50 IST Report Abuse
Maheshஉண்மை...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X