அரசியல் செய்தி

தமிழ்நாடு

அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் :தமிழக காங்., தலைவர் அழகிரி வலியுறுத்தல்

Added : பிப் 04, 2020 | கருத்துகள் (16)
Advertisement
அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை நீக்க வேண்டும் :தமிழக காங்., தலைவர் அழகிரி வலியுறுத்தல்

சென்னை: 'அமைச்சர் ராஜேந்திர பாலாஜியை, பதவியில் இருந்து நீக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தி உள்ளார்.

அவரது அறிக்கை:ஜெயலலிதா இருந்தவரை, வாய்மூடி மவுனிகளாகவும், கொத்தடிமைகளாகவும் இருந்த அமைச்சர்கள், இன்று வரம்பு மீறி, அநாகரீகமாக, பல குரல்களில் பேசுகிற, சுதந்திரத்தை பெற்றிருக்கின்றனர்.சட்ட விரோத பேச்சுஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பத்திரிகையாளர்களிடம் வாய்க்கு வந்தபடி, கீழ்தரமாக அநாகரீகமான வார்த்தைகளை, சமீபத்தில், அள்ளி வீசியிருக்கிறார்.

தமிழக அரசு கேட்பதை எல்லாம், மோடி அரசு வாரி வழங்குவதாக கூறி, மருத்துவக் கல்லுாரிகள் துவக்க, அனுமதி வழங்கியிருப்பதை குறிப்பிட்டு உள்ளார்.ஆனால், 'நீட்' தேர்வு திணிக்கப்படுவதை, தடுக்க முடியாமல் உள்ளனர். திருச்சியில், பா.ஜ., நிர்வாகி கொல்லப்பட்டதற்கு, தனிப்பட்ட பகை காரணம். மதமோ, அரசியலோ காரணமல்ல என்பதை, காவல் துறையினர் தெளிவுப்படுத்தி உள்ளனர். ஆனால், 'இந்த கொலைக்கு காரணம், முஸ்லிம் பயங்கரவாதம்' என, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியிருப்பது, அப்பட்டமான சட்ட விரோத பேச்சு.

சமீப காலமாக, அவர் பா.ஜ.,வின் ஊதுகுழலாக மாறியது ஏன்?அவரது பேட்டியை பார்க்கும் யாரும், அவரை ஒரு மன நோயாளியாகவே பார்ப்பர். இவரது பேச்சு, மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையிலும், மதங்கள் இடையே வன்மத்தை வளர்த்து, கலவரத்தை உருவாக்குகிற வகையிலும் இருப்பதை, எவரும் மறுக்க முடியாது. இது குறித்து, முதல்வர் கவலைப்பட்டதாக தெரியவில்லை.

அமைச்சரின் பேச்சு, அரசியல் அமைப்பு சட்டப்படி எடுத்துக் கொண்ட, பதவி பிரமாணத்திற்கு எதிரானது. எனவே, அவரை பதவியிலிருந்து, முதல்வர் நீக்க வேண்டும். இல்லையேல், கவர்னர் தலையிட்டு, அவரை அமைச்சரவையிலிருந்து நீக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.


ரத்தக்களறி


அவர் தொடர்ந்து அமைச்சராக நீடித்தால், தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்து, மதக்கலவரங்கள் நடப்பதற்கு, வாய்ப்புகள் உருவாகி விடும். தமிழகத்தில் ரத்தக்களறியை உருவாக்குவது தான், ராஜேந்திர பாலாஜி யின் நோக்கம் என்றால், அதை முறியடிக்க வேண்டிய கடமையும், பொறுப்பும், ஜனநாயக மதச் சார்பற்ற சக்திகளுக்கு இருக்கிறது.இவ்வாறு, கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராமதாசன் - chennai,இந்தியா
06-பிப்-202002:53:11 IST Report Abuse
ராமதாசன் அவங்க எல்லாம் பேசுறாங்க அதுவம் உண்மையை வேறு பேசுறாரு .. ஹ்ம்ம் நமக்கு எப்ப இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்கும் அதுனாலே இப்படி சொல்ல வேண்டியது தான் - புலம்ப விட்டுட்டான்
Rate this:
Share this comment
Cancel
Muthu Kumar - Manama,பஹ்ரைன்
05-பிப்-202016:16:19 IST Report Abuse
Muthu Kumar அதை சொல்லும் தகுதி இவருக்கு இல்லை. உங்கள் பார்ட்டியில் எத்தனை உளறு வாயர்கள் (ஈ வி கே எஸ் போன்ற ) உள்ளார்கள்... அவர்களை எல்லாம் தூக்கி விட்டு அடுத்தவர் பற்றி விமர்சனம் வையுங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Subburamu Krishnaswamy - Coimbatore,இந்தியா
05-பிப்-202013:41:42 IST Report Abuse
Subburamu Krishnaswamy Comedians are more among the Sonia Raul slaves. No body care about these slaves and boot lickers of Sudalai.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X