அரசியல் செய்தி

தமிழ்நாடு

உதயநிதிக்கு பட்டம் தரலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

Added : பிப் 04, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
சென்னை : ''சிறைக்கு சென்றவர், சொற்பொழிவாளர், பேச்சாளர் என, பல பட்டங்களை, நடிகர் உதயநிதிக்கு தரலாம்,'' என, அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.நுழைவு தேர்வுதமிழக அரசின், இலவச சைக்கிள் வழங்கும் விழா, சென்னை, ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன் ஆகியோர், 1,750 மாணவர்களுக்கு, சைக்கிள்கள் வழங்கினர்.பின், அமைச்சர்
 உதயநிதிக்கு பட்டம் தரலாம்: அமைச்சர் ஜெயகுமார் கிண்டல்

சென்னை : ''சிறைக்கு சென்றவர், சொற்பொழிவாளர், பேச்சாளர் என, பல பட்டங்களை, நடிகர் உதயநிதிக்கு தரலாம்,'' என, அமைச்சர் ஜெயகுமார் பேசினார்.

நுழைவு தேர்வுதமிழக அரசின், இலவச சைக்கிள் வழங்கும் விழா, சென்னை, ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில், நேற்று நடந்தது. இதில், அமைச்சர்கள் ஜெயகுமார், செங்கோட்டையன் ஆகியோர், 1,750 மாணவர்களுக்கு, சைக்கிள்கள் வழங்கினர்.

பின், அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டி: தமிழகம் முழுவதும் இதுவரை, 45.48 லட்சம் மாணவர்களுக்கு, இலவச சைக்கிள்கள் வழங்கப்பட்டு உள்ளன. இலவச மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தில், உத்தர பிரதேச அரசு தோல்வி அடைந்தாலும், தமிழக அரசு, தொடர்ந்து திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இந்தியாவிலேயே, தமிழக மாணவர்களுக்கு தான், நுண்ணறிவு அளவு அதிகமாக உள்ளது. 'நீட்' நுழைவு தேர்வில் இருந்து விலக்கு பெறுவதற்கு, தமிழக அரசு தொடர்ந்து போராடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அமைச்சர் ஜெயகுமார் அளித்த பேட்டி: முஸ்லிம்கள் பற்றி, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதில், உள்நோக்கம் எதுவும் இல்லை. அது, அவரின் தனிப்பட்ட கருத்து; அரசின் கருத்து அல்ல.போராட்டம்சிறைக்கு சென்றவர், சொற்பொழிவாளர், பேச்சாளர் என, பல பட்டங்களை, உதயநிதிக்கு தரலாம். உதயநிதியை முன்னிலை படுத்துவதற்காகவே, அரசு தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி.,யை கண்டித்து, தி.மு.க., சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது.இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Varun Ramesh - Chennai,இந்தியா
06-பிப்-202019:48:47 IST Report Abuse
Varun Ramesh உதயநிதிக்கு பெயர் வாங்கி தர வேண்டுமென்ற உயரிய நோக்கத்தோடுதான் டி.என்.பி.சி தேர்வுகளில் திட்டமிட்டு முறை கேடுகள் நடந்தனவா? என்ன சொல்ல வருகிறீர்கள் அமைச்சர் அவர்களே?
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
06-பிப்-202017:32:46 IST Report Abuse
bal ஏன்யா அந்த உதைக்கிற நாயை பெரிய ஆளாக்குகிறீங்க...சும்ம்மா விடுங்க...
Rate this:
Cancel
Ravi - Chennai,இந்தியா
06-பிப்-202015:43:02 IST Report Abuse
Ravi டெல்லியில் அமுல் பேபி , இங்கு லால்லி பாப் பேபி .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X