அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பா.ம.க.,வுக்கு வெற்றி; தி.மு.க.,வுக்கு தோல்வி': ராமதாஸ் பெருமிதம்

Added : பிப் 04, 2020 | கருத்துகள் (7)
Advertisement
 'பா.ம.க.,வுக்கு வெற்றி; தி.மு.க.,வுக்கு தோல்வி':  ராமதாஸ் பெருமிதம்

சென்னை : 'ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது, பா.ம.க.,வுக்கு கிடைத்த வெற்றி' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.

அவரது அறிக்கை:தமிழகத்தின் சமூக, பொருளாதார சூழலில், ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்துவது நல்லதல்ல. அது, ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின், இடைநிற்றலுக்கு வழிவகுக்கும். எனவே, பொதுத்தேர்வு நடத்தக் கூடாது என, வலியுறுத்தினேன்.


போராட்டம்


பா.ம.க., சார்பில், ஜன., 28ல், மாவட்ட, வட்ட தலைநகரங்களில், அறப்போராட்டம் நடத்தப்படும் என, அறிவித்தேன். அதைத் தொடர்ந்து, பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 27ம் தேதி காலை, என்னை தொடர்பு கொண்டார். பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டிருந்தாலும், மூன்று ஆண்டுகளுக்கு, மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம் என, அரசு ஆணையிட்டிருப்பதால், போராட்டத்தை கைவிடும்படி கோரினார்.

அதை ஏற்க மறுத்து, பொதுத் தேர்வுகளை முற்றிலும் ரத்து செய்யும்படி வலியுறுத்தினேன். அதை ஏற்று, 'அடுத்த ஆண்டு முதல், பொதுத் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து, அரசு பரிசீலிக்கும்' என, அமைச்சர் உறுதி அளித்தார்; போராட்டம் கைவிடப்பட்டது. இந்நிலையில், 'ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வு கைவிடப்படுகிறது; பழைய முறையே தொடரும்' என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்காக முதல்வருக்கும், அமைச்சர் செங்கோட்டையனுக்கும் நன்றி.

இது, பா.ம.க.,விற்கு கிடைத்த வெற்றி. அதே நேரம், முதன்மை எதிர்க்கட்சியான, தி.மு.க., இவ்விஷயத்தில், ஆக்கப்பூர்வமாக செய்தது என்ன; தி.மு.க., தலைவர் ஸ்டாலின், இதுகுறித்து எத்தனை முறை, சட்டசபையில் பேசினார் என்பதை, விளக்க வேண்டும்.


மக்கள் நலன்


விளம்பரம் கிடைக்கும் விஷயங்களுக்காக மட்டும், குரல் கொடுக்கும் தி.மு.க., மக்கள் நலன் சார்ந்த, மாணவர் நலன் சார்ந்த பிரச்னைகளில், ஆக்கப்பூர்வமாக செயல்படுவதில், தோல்வி அடைந்து விட்டது. இதை, மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, ராமதாஸ் கூறியுள்ளார்.


ஜாதிவாரி கணக்கெடுப்பு: மோடிக்கு கடிதம்


பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில், 1927 முதல், 1950 வரை, ௧௦௦ சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டது. அதற்கு அடிப்படையாக அமைந்தது, ஆங்கிலேயர் காலத்தில் நடத்தப்பட்ட, ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு தான். அதன்பின், இந்தியாவில் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவில்லை.

இதனால், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட விஷயங்களில், முழுமையான புள்ளிவிபரங்கள் கிடைக்காமல், தேவையற்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை, ஜாதிவாரி கணக்கெடுப்பாக நடத்த வேண்டும் என, பா.ம.க., வலியுறுத்தியது. அதை செய்யாமல், சமூக, பொருளாதார கணக்கெடுப்பு என்ற பெயரில், எதற்கும் உதவாத சடங்கை, அப்போதைய மத்திய அரசு நடத்தியது. அதன் விபரங்களும் வெளியிடப்படவில்லை.

எனவே, 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பையாவது, ஜாதிவாரியாக நடத்த வேண்டும். 2018ல், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்த, பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் கணக்கெடுப்புக்கும், ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும், பெரிய வித்தியாசம் இல்லை. எனவே, 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பை, ஜாதிவாரியாக நடத்த, தாங்கள் ஆணையிட வேண்டும். இவ்வாறு, கடிதத்தில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SivaKumar.G - chennai,இந்தியா
07-பிப்-202016:38:41 IST Report Abuse
SivaKumar.G ராமதாஸ் எல்லாம் சமூக நலன் பற்றி பேச எந்த அருகதையும் இல்லாத நபர் இவர் செய்த காரியம் ஜாதி வெறி மற்றும் இந்த ஜாதி வெறிக்காக தமிழ்நாடு முழுவதும் சாலைகளை சேதப்படுத்தி குண்டும் குழியுமாக்கி மறியல் செய்த நபர் மற்றும் சில விஷயம் என்னவென்றால் பணம் பதவிக்காக எதிர் கட்சியை தாக்கி பேசிவிட்டு அடுத்த தேர்தலில் அந்த கட்சியுடன் கூட்டணி இன்னும் சொல்லி கொண்டே போகலாம் இவரை பற்றி
Rate this:
Share this comment
Cancel
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
07-பிப்-202015:49:37 IST Report Abuse
Ramalingam Shanmugam மூல பத்திரம் எங்கே சுடலை
Rate this:
Share this comment
Cancel
tamizha tamizha - Bellevue,யூ.எஸ்.ஏ
07-பிப்-202006:19:27 IST Report Abuse
tamizha tamizha பச்சோந்தி ராமதாஸ், உனக்கு வெட்கமே கிடையாதா.....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X