துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு, சம்மன்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

துப்பாக்கி சூடு சம்பவம்: ரஜினிக்கு, 'சம்மன்'

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 04, 2020 | கருத்துகள் (12)
Share
Rajini,rajinikanth,tuticorin,tuticorin_firing,தூத்துக்குடி,துப்பாக்கிச்சூடு,ரஜினி,ரஜினிகாந்த்,சம்மன்

சென்னை: துாத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, நடிகர் ரஜினிக்கு, விசாரணை கமிஷன், 'சம்மன்' அனுப்பி உள்ளது.

துாத்துக்குடியில் உள்ள, 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக, 2018 மே, 22ல், துாத்துக்குடியில் பேரணி நடந்தது. அப்போது வன்முறை ஏற்பட்டதால், போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர்; இதில், 13 பேர் இறந்தனர்.

இது குறித்து, நீதி விசாரணை நடத்த, ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், ஒரு நபர் கமிஷன் அமைக்கப்பட்டது. விசாரணை கமிஷன், பல்வேறு தரப்பினரிடமும் விசாரித்து வருகிறது. துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, நடிகர் ரஜினி, துாத்துக்குடி சென்று பாதிக்கப்பட்டோரை, நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

அப்போது, பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், 'துாத்துக்குடி போராட்டத்தில், வன்முறை நிகழ்ந்ததற்கு, சமூக விரோதிகளே காரணம்' என்றார். இது குறித்து, அவரிடம் விசாரிப்பதற்காக, வரும், 25ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, ரஜினிக்கு, ஆணையம் சார்பில், 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X