பட்ஜெட் விஷயத்தில் வதந்தி பரப்புவதா? எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் பாய்ச்சல்

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 04, 2020 | கருத்துகள் (13+ 42)
Advertisement
PM,Modi,DelhiElection,Budget2020,Budget,பிரதமர்,மோடி,நரேந்திரமோடி,பட்ஜெட்

புதுடில்லி : ''மத்திய பட்ஜெட் தொடர்பாக பொய்யான தகவல்களை கூறி, எதிர்க்கட்சிகள், மக்களை தவறாக வழி நடத்துகின்றன,'' என, பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. இதில், பிரதமர் மோடி பேசியதாவது:வட கிழக்கு மாநிலங்களில் போடோலாந்து தனி மாநிலம் கோரி போராடி வந்த குழுக்களுடன், அமைதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது; இது, வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை. இதன்மூலம், நீண்டகாலமாக நிலவி வந்த வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், மிகச் சிறப்பானது.

நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், இந்த பட்ஜெட் அமைந்துள்ளது. துவக்கதில், இந்த பட்ஜெட்டை விமர்சித்தவர்கள் கூட, இப்போது சிறப்பான பட்ஜெட் என பாராட்டுகின்றனர். ஆனால், சுயநலத்துடன் செயல்படும் எதிர்க்கட்சியினர், பட்ஜெட் குறித்து வதந்திகளை பரப்புகின்றனர். மக்களை தவறாக வழி நடத்துகின்றனர்.இவ்வாறு, அவர் பேசினார்.இந்த கூட்டத்தில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், சுகாதார அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோர் தாக்கல் செய்தனர்.


பிரசாரம்


டில்லி சட்டசபை தேர்தலில், பா.ஜ., சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:டில்லியில் மக்கள் நல திட்டங்களை செயல்படுத்தும், நிர்வாக திறமை மிக்க அரசு தேவைப்படுகிறது. தற்போதுள்ள ஆம் ஆத்மி அரசு, சலுகைகளை வழங்கும் அரசாக உள்ளது. குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவு தரும் அரசு தான், டில்லியில் அமைய வேண்டும்.

மக்களுக்கு பயன் அளிக்கும் மத்திய அரசின் திட்டங்களை, கெஜ்ரிவால் தலைமையிலான அரசு செயல்படுத்தவில்லை. சலுகைகளையும், இலவசங்களையும் வழங்கி, மக்களை ஏமாற்றி வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (13+ 42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
05-பிப்-202017:01:31 IST Report Abuse
தமிழ் ஒரு கிலோ கோதுமை மாவு 2 ரூபாய்க்கு தருவோம் என்று யார் தேர்தல் அறிக்கையில் சொன்னது பிரதமர் அவர்களே. உங்கள் கட்சி தேர்தல் அறிக்கையில் சொல்லும் சலுகைகளை மட்டும் எப்படித்தான் வசதியாக மறந்துவிடுகிறீர்களோ தெரியவில்லை.
Rate this:
Share this comment
Cancel
Appan - London,யுனைடெட் கிங்டம்
05-பிப்-202013:24:32 IST Report Abuse
Appan பிஜேபி காரர்களுக்கு பொருளாதாரம் என்றால் என்ன என்று தெரியாது..இவர்களுக்கு தெரிந்த்து எல்லாம் ராமர். கீதை..இந்து மதம்..இதை வைத்து வளம் என்று நினைக்கிறார்கள்..ஏதும் செய்யாமல் யோக மட்டும் செய்தால் பொருள் ஈட்டி வாழ முடியுமா..?.சும்மா காயத்திரி மந்திரம் பாடினால் சோறு வருமா.?..இவர்களில் பொருளாதார அறிவு ..' குருடன்களுக்கு வெள்ளை நிறம் பற்றி சொன்ன பொது அவர்கள் யானையின் தும்பிக்கை போல் என்று நினைத்தார்களாம்..இப்படி பட்ட அறிவை வைத்து பிஜேபி எப்படி இந்தியாவை முன்னேற்றும்..நாட்டின் பொருளாதார கொள்கை மிகவும் முக்கியம்..சரித்திரத்தில் இதற்க்கு ஒரு பெரிய உதாரணம் உள்ளது..1930 கலீல் வாங்க பஞ்சம் வந்து 5 கோடி மக்கள் செத்தார்கள்..வற்றா கங்கை ஓடும் வங்கத்தில் பஞ்சமா..?..ஆம் அங்கு தான் பஞ்சம் வந்தது..எப்படி..?.அப்போ நம்மை ஆண்ட ஆங்கிலேயர்கள் வங்கத்தில் புதிய சட்டத்தை கொண்டு வந்தார்கள்..
Rate this:
Share this comment
Cancel
05-பிப்-202013:14:13 IST Report Abuse
அண்ணாமலை ஜெயராமன் எல்லாவற்றிற்கும் இவர்கள் வதந்தியை பரப்புவார்கள். தெரிந்த விஷயம் தான்
Rate this:
Share this comment
Anandan - chennai,இந்தியா
06-பிப்-202009:54:37 IST Report Abuse
Anandanவதந்தியை பரப்புவதே நீங்கதானய்யா. உங்க ஆட்சி வந்தால் ருபாய் மதிப்பு உயரும், பெட்ரோல் விலை குறையும், காஸ் விலை குறையும், விலை வாசி குறைந்துவிடும், வேலை வாய்ப்புகள் குறையும், முக்கியமா வெளிநாட்டில் உள்ள கருப்பு பணம் இந்தியா கொண்டு வரப்படும், அடடடா எத்தனை வதந்தி ஒன்னையாவது செஞ்சீங்களா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X