பொது செய்தி

தமிழ்நாடு

என்.எஸ்.எஸ்., முகாம் நிறைவு

Added : பிப் 04, 2020
Advertisement

கடலுார்:குறிஞ்சிப்பாடி அடுத்த வெங்கடாம்பேட்டை அரசு மேல்நிலை பள்ளி சார்பில், நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் நிறைவு விழா வெ.பிள்ளைபாளையத்தில் நடந்தது.
தலைமை ஆசிரியர் பிரதீப் தலைமை தாங்கினார். சஞ்சிவிகாந்தி முன்னிலை வகித்தார். ஊராட்சி உறுப்பினர் வேலு வரவேற்றார். குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கனகசபை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.நாட்டு நலப்பணித் திட்ட மாவட்ட தொடர்பு அலுவலர் திருமுகம், மரக்கன்றுகளை நட்டார். பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர் குணசேகர், கல்விக்குழுத் தலைவர் ராஜேந்திரன், முன்னாள் சத்துணவு பொறுப்பாளர் ராஜேந்திரன் பேசினர். ஆசிரியர்கள் சங்கர நாராயணன், ரமேஷ், சுந்தரம், ஸ்ரீதர் கருத்துரையாற்றினர்.முகாமில் கோவில் உழவாரப் பணிகள், சாலை சீரமைப்பு, மழைநீர் சேகரிப்பு பேரணி நடந்தது. ஏற்பாடுகளை சுந்தர்ராஜன் செய்திருந்தார்.ஆசிரியர் ராஜன்பாபு நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X