பொது செய்தி

தமிழ்நாடு

பழநிக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கம்

Added : பிப் 04, 2020
Share
Advertisement

தேனி : தைப்பூச திருவிழாவிற்காக பழநிக்கு 350 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.பழநி முருகன் கோயிலில் பிப். 2 ல் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

பிப்.8ல் தைப்பூச திருவிழா நடக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரை செல்கின்றனர்.இவ்விழாவையொட்டி மதுரை, திண்டுக்கல், தேனி, காரைக்குடி, நத்தம், திருச்சி, புதுக்கோட்டை, கரூர், ஈரோடு, கோவை, திருப்பூர் உட்பட பல ஊர்களில் இருந்து பக்தர்கள் பழநிக்கு செல்வர்.

அவர்களின் வசதிக்காக இவ்வூர்களுக்கு பழநியில் இருந்து இன்று (பிப். 5) முதல் பிப். 9 வரை 350 அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. தேவைக்கு ஏற்ப மேலும் அதிக பஸ்கள் இயக்கப்படும். பஸ்ஸ்டாண்டுகளில் பக்தர்களுக்கு வழிகாட்ட அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர், என, மதுரை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் முருகேசன் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X