பொது செய்தி

தமிழ்நாடு

தேக்கடிக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு

Added : பிப் 04, 2020
Advertisement
தேக்கடிக்கு சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு

கூடலுார் : தேக்கடியில் படகு சவாரி செய்வதற்கு சுற்றுலாபயணிகளின் வருகை கடந்த இரு நாட்களாக அதிகரித்துள்ளது.

கேரளாவின் முக்கிய சுற்றுலா தலமான தேக்கடியில், அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவிலுள்ள ஏரியில் படகு சவாரி செய்து கொண்டே வனவிலங்குகளை பார்த்து ரசிப்பது இதன் தனிச் சிறப்பு.பகல் நேரத்தில் கடும் வெப்பம் நிலவினாலும், காலை, மாலையில் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவுவதால், கடந்த இரு நாட்களாக தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இங்கு படகு சவாரி மட்டுமன்றி யானை சவாரி, அடர்ந்த வனப்பகுதிக்குள் டிரக்கிங், மாலை நேரங்களில் தேக்கடியில் கதகளி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளில் பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தேக்கடி பஜார் களை கட்டியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X