பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையிலிருந்து நீர்திறப்பு குறைப்பு

Added : பிப் 04, 2020
Share
Advertisement

கூடலுார் : பெரியாறு அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்ட நீர் 300 கனஅடியாக குறைக்கப்பட்டது.

பெரியாறு அணை நீரை நம்பி, தேனிமாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 707 ஏக்கரில் இரு போக நெல் சாகுபடி உள்ளது. மழையின்றி நீர்மட்டம் குறைவால் இரண்டாம் போக நெல் சாகுபடிக்கு சிக்கல் ஏற்பட்டது. அணையிலிருந்து தமிழகப் பகுதிக்கு திறக்கப் பட்ட 467 கனஅடி நீர் நேற்று காலையில் இருந்து, வினாடிக்கு 300 கனஅடியாக குறைக்கப்பட்டது.

அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 117 அடியாக (மொத்த உயரம் 152 அடி ) இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 157 கன அடியாக இருந்தது. நீர் இருப்பு 2087 மில்லியன் கன அடி. நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கடுமையான வெப்பம் நிலவுவதால் நீர்மட்டம் மேலும் குறையும் வாய்ப்புள்ளது.

வைகை அணையின் நீர்மட்டம் 53.66 அடியாக (மொத்த உயரம் 71 அடி)இருந்தது. நீர்வரத்து 97 கன அடியாகவும், நீர் திறப்பு 1190 கன அடியாகவும் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X