சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகளுக்கு பாலியல் தொந்தரவு; தந்தைக்கு ஏழு ஆண்டு சிறை

Added : பிப் 04, 2020 | கருத்துகள் (1)
Advertisement
 மகளுக்கு பாலியல் தொந்தரவு; தந்தைக்கு ஏழு ஆண்டு சிறை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் மானமதுரையில் மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த தந்தைக்கு ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதுார் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் 52. இவர் 32 வயது பெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்து மானாமதுரையில் தங்கியிருந்தார். அப்பெண்ணுக்கு முதல் கணவருக்கு பிறந்த 12 வயதில் மகள் உள்ளார்.2018ல் தனது மகளை, இரண்டாவது கணவர் பாலியல் தொந்தரவு செய்ததாக அப்பெண் கொடுத்த புகாரில், பாலசுப்பிரமணியனை மானாமதுரை மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இவ்வழக்கை விசாரித்த சிவகங்கை மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ப.உ.செம்மல், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பாலசுப்பிரமணியனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயின் பெயரில் மாவட்ட கலெக்டரின் நிதியில் இருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும், உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
05-பிப்-202013:04:23 IST Report Abuse
Girija இவன் உள்ளே இருந்தாலும் பின்னாளில் வெளியே வந்தாலும் குடும்பம் கவுரவமாக வாழ முடியாது , இவனை தூக்கில் போடுங்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X