சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆட்டோ கவிழ்ந்து விபத்து டிரைவர் பலி: மூவர் காயம்

Added : பிப் 04, 2020
Advertisement

கடலுார்:ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் இறந்தார். கடலுார் முதுநகர் அடுத்த கொடிகால்குப்பத்தை சேர்ந்தவர் தங்கமணி, 37; ஆட்டோ டிரைவர். இவர், சிதம்பரம்-கடலுார் சாலை வழியாக முதுநகரில் இருந்து ஏணிக்காரன் தோட்டத்திற்கு ஆட்டோ ஓட்டி சென்றார். ஏணிக்காரன்தோட்டம் அரசு சேமிப்பு கிடங்கு அருகே வந்த போது, ஆட்டோ டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இதில், காயமடைந்த தங்கமணி அரசு மருத்துவமனை செல்லும் வழியில் இறந்தார். காயமடைந்த ஆட்டோ பயணிகள் ஏணிக்காரன்தோட்டத்தை சேர்ந்த ஜெயந்தன் மனைவி தமிழ்மொழி, 28; ஏழுமலை மனைவி சின்னப்பொண்ணு, 55; ராமநாதன் மனைவி நாகமல்லி, 60; ஆகியோருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X