கோர்ட் செய்தி

தமிழ்நாடு

மாநில தகவல் ஆணைய கிளை மதுரையில் அமைக்க கோரி வழக்கு

Added : பிப் 05, 2020
Advertisement

மதுரை : மாநில தகவல் ஆணையத்தின் கிளையை, மதுரையில் அமைக்க கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம், கடம்பூர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:அரசின் செயல்பாடுகளை, மக்கள் வெளிப்படையாக அறிந்து கொள்ள, தகவல் பெறும் உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது. மாநில தகவல் ஆணையம், சென்னையில் உள்ளது. இங்கு தாக்கல் செய்யப்படும் மேல்முறையீட்டு மனுக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. விசாரிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

கூடுதல் கமிஷனர்களை நியமித்து, விசாரணைக்கு கூடுதல் அமர்வுகளை ஏற்படுத்த வேண்டும்.தென் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள், விசாரணைக்காக, சென்னை சென்று வருவதில் நேரம், பணம் விரயமாகிறது. சென்னை உயர் நீதிமன்றத்தின் கிளை, மதுரையில் உள்ளது போல், மாநில தகவல் ஆணைய கிளையை, மதுரை அல்லது தென் மாவட்டங்களில், ஏதேனும் ஒரு நகரில் அமைக்கக் கோரி, மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, மனு செய்தார்.

நீதிபதிகள், எம்.துரைசாமி, டி.ரவீந்திரன் அமர்வு, மத்திய சட்டத் துறை செயலர், தமிழக தலைமை செயலர், சட்டத்துறை செயலர், மாநில தகவல் ஆணைய முதன்மை கமிஷனருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X