சாலை விபத்து: ஒருவர் பலி | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சாலை விபத்து: ஒருவர் பலி

Added : பிப் 05, 2020
Share

பண்ருட்டி:டிராக்டர் டிப்பர் மோதியதில், மோட்டார் சைக்கிளில் சென்றவர் பலியானார்.
பண்ருட்டி அடுத்த பூண்டி விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜிவ்காந்தி,30; இதே பகுதியை சேர்ந்தவர் மகாவிஷ்ணு; 45; இருவரும் நேற்று முன்தினம் காலை மோட்டார் சைக்கிளில் ராசாப்பாளையத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். ராஜிவ்காந்தி மோட்டார் சைக்கிளை ஓட்டினார்.கட்டமுத்துப்பாளையம் அருகே வந்த போது, எதிரில் வந்த டிராக்டர் டிப்பர், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மகாவிஷ்ணு பலத்த காயமடைந்தார். பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் இறந்தார். இது குறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X