கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஓ.ராஜாவிற்கு எதிரான வழக்கு; உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

Added : பிப் 05, 2020
Advertisement

மதுரை : துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் சகோதரர், ஓ.ராஜாவிற்கு எதிரான வழக்கில், போலீஸ் அதிகாரிகள் நான்கு பேரை எதிரிகளாக சேர்க்க கோரிய வழக்கை, உயர் நீதிமன்ற மதுரை கிளை ஒத்தி வைத்தது.

தேனி மாவட்டம், பெரியகுளம், கள்ளிப்பட்டியைச் சேர்ந்தவர், நாகமுத்து. கைலாசபட்டி கைலாசநாதர் கோவில் பூஜாரியாக இருந்தார்.தன்னை பூஜை செய்ய விடாமல், சிலர் வெளியேற்றியதாக, தென்கரை போலீசில், நாகமுத்து புகார் செய்தார். நாகமுத்து, 2012 டிச., 7ல் கடிதம் எழுதி வைத்து, தற்கொலை செய்தார். அதில், 'புகாரை வாபஸ் பெற, அப்போதைய பெரியகுளம் நகராட்சி தலைவர் ஓ.ராஜா மிரட்டினார்.ஓ.ராஜா, மணிமாறன் உட்பட ஏழு பேர் தான் தற்கொலைக்கு காரணம்' என குறிப்பிடப்பட்டிருந்தது.

தற்கொலைக்கு துாண்டியதாக, அவர்கள் மீது, தென்கரை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். திண்டுக்கல் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.நாகமுத்துவின் தந்தை சுப்புராஜ், 'அப்போதைய போலீஸ் அதிகாரிகள் நால்வர், நாகமுத்துவை மிரட்டி உள்ளனர். ஓ.ராஜா தரப்பிற்கு ஆதரவாக செயல்பட்டு உள்ளனர். போலீசார் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், நாகமுத்து தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை.'நான்கு போலீஸ் அதிகாரிகளையும் வழக்கில் எதிரிகளாக சேர்க்க உத்தரவிட வேண்டும்' என, உயர் நீதிமன்ற கிளையில் மனு செய்தார்.நீதிபதி எம்.நிர்மல்குமார், பிப்., 13க்கு ஒத்தி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X