பொது செய்தி

தமிழ்நாடு

ஊரக திறனறி தேர்வில் வெற்றி மாணவர்களுக்கு பரிசு

Added : பிப் 05, 2020
Advertisement
 ஊரக திறனறி தேர்வில் வெற்றி மாணவர்களுக்கு பரிசு

புதுச்சத்திரம்:வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் ஊரக திறனறி தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டது.தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த செப்டம்பர் மாதம் ஊரக திறனறி தேர்வு நடந்தது. இதன் தேர்வு முடிவுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அதில் வேளங்கிப்பட்டு அரசு உயர்நிலை பள்ளியைச் சேர்ந்த விஜயராணி, மேனகா, ஹரிஷா, காவியா தேர்ச்சி பெற்றனர்.ஊரக திறனறி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் தேர்ச்சிபெற உறுதுணையாக இருந்த பட்டதாரி ஆசிரியர் சமேதனுக்கு பரிசு வழங்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X