தமிழ்நாடு

'கருத்து கந்தசாமிகள்' தொல்லை 'கொடை' யில் தாங்க முடியலை

Added : பிப் 05, 2020
Advertisement

கொடைக்கானல்,
சுற்றுலா தலமான கொடைக்கானலில் சமூக ஆர்வலர்கள் பெயரில் நடமாடும் நபர்களால் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள், வர்த்தகர்கள் மனம் குமுறுகின்றனர்.கொடைக்கானலில் சுற்றுலாதான் முக்கிய தொழில். இதை நம்பியே விடுதி, ஓட்டல், கட்டுமானம் மற்றும் சுற்றுலா சார்ந்த தொழில்கள் உள்ளன. இவை பலவற்றிலும் அரசு வழி காட்டிய நெறிமுறைகள் காற்றில் விடுக்கப்பட்டு முறைகேடுகள் அரங்கேறின.கொடைக்கானலில் இதை சாதகமாக பயன்படுத்தி சம்பாதிக்க, சமூக ஆர்வலர்கள் என்ற பெயரில் ஏராளமானோர் உருவெடுத்துள்ளனர். இவர்கள் எந்நேரமும் ஏதாவது ஒரு அமைப்பின் முறைகேடுகளை மையப்படுத்தி சுவரொட்டி, சமூக வலைத்தளம் மூலம் போராட்டங்களை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்துவது, பின்பு கட்ட பஞ்சாயத்து நடத்தி வளம் கொழிப்பது என உள்ளனர்.அரசு அலுவலங்கள், நகராட்சியில் ஆதிக்கம் செலுத்தி அதிகாரிகளை வசப்படுத்தி அரசு நிர்வாகங்களில் தலையிட்டு கோலோச்சுகின்றனர். கொடைக்கானலில் விதிமீறல் கட்டடங்கள் பலவற்றில் 'சீல்' வைக்க இது போன்ற நபர்களின் தலையீடே காரணமாக அமைந்தது. யாரும் இவர்களை கண்டுகொள்ளாததால், அனைத்து தரப்பினரையும் மிரட்டி வருகின்றனர்.தவறுகளை சுட்டி காட்டுவது போல கருத்துக்களைக்கூறி, தங்களை வளப்படுத்திக் கொள்கின் றனர். மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற சமூக ஆர்வலர்களை அடையாளம் கண்டு அரசு நிர்வாகங்களில் தலையீடு செய்வதில் இருந்து விலக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X