ரேஷன் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு?

Added : பிப் 05, 2020
Advertisement

அம்பத்துார்:ரேஷன் கடைகளில், கார்டுதாரர்களுக்கு, பாமாயில், கோதுமை, மண்ணெண்ணெய் கிடைக்காததால், நுகர்வோர் ஏமாற்றம் அடைகின்றனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள, ஒவ்வொரு கடையிலும், 1,000 முதல், 1,800 கார்டுதாரர்கள், உணவுப்பொருட்களை பெறுகின்றனர்.இந்த நிலையில், மூன்று மாதமாக, 80 சதவீத கார்டுதாரர்களுக்கு மட்டுமே, பாமாயில் கிடைக்கிறது. மாத இறுதியில், உணவுப்பொருள் வாங்கு வோருக்கு, எண்ணெய் கிடைப்பதில்லை.அதே போன்று, ஒரு கார்டுக்கு, 10 கிலோ கோதுமை வழங்கலாம் என்ற உத்தரவு இருந்தாலும், ஒரு கார்டுக்கு, 750 முதல், 800 கிராம் என்ற அளவில் தான், கோதுமை ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அதாவது, 1,400 கார்டுகள் உள்ள கடைக்கு, 1,010 கிலோ கோதுமை தான், ஒதுக்கீடு செய்யப் படுகிறது. அதனால், அனைவருக்கும் கோதுமை கிடைப்பதில்லை. சில கடைகளில், இரண்டு மாதத்திற்கு ஒருமுறை, ஒரு கார்டுக்கு, 2 கிலோ வீதம், கோதுமை வழங்கப்படுகிறது.அதுவும்,
60 சதவீத கார்டுதாரருக்கு மட்டுமே கிடைக்கும். சிலருக்கு கிடைத்து, மற்றவர்களுக்கு கிடைக்காததால், அவர்கள் கடை ஊழியர்களிடம், வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர்.

ஒவ்வொரு மாதமும், 20ம் தேதிக்கு பின், கோதுமை கேட்கும் நுகர்வோருக்கு, 'கோதுமை இருப்பு இல்லை; அடுத்த மாதம் கொடுக்கிறோம்' என்ற பதில் தான் கிடைக்கும்.அதே போன்று, நுகர்வோருக்கு, மண்ணெண்ணெய் கிடைப்பதிலும் சிக்கல் உள்ளது. 1 காஸ் சிலிண்டர் உள்ள கார்டுக்கு, 1 லிட்டர் மண்ணெண்ணெயும், சிலிண்டர் இல்லாதவர்களுக்கு, 3 லிட்டரும் வழங்க வேண்டும்.

ஆனால், அதிலும் குளறுபடியான ஒதுக்கீடு காரணமாக, சிலிண்டர் இல்லாத பலரும், மண்ணெண்ணெய் கிடைக்காமல் தவிக்கும் நிலை உள்ளது. உணவுப்பொருள் வழங்கல் துறையினர், இது குறித்து, சீராய்வு செய்து, ஒழுங்குமுறையை மேற்கொள்ள வேண்டுமென, நுகர்வோர் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X