சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலக்கோட்டையில் ரூ.14 லட்சம் மோசடி : இருவர் கைது

Added : பிப் 05, 2020
Advertisement

நிலக்கோட்டை, :நிலக்கோட்டையில் தொழில் செய்வதாகக் கூறி ரூ.14 லட்சம் மோசடி செய்த இருவர் கைது செய்யப்பட்டனர். 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.நிலக்கோட்டை சி.எஸ்.ஐ., சர்ச் தெருவைச் சேர்ந்தவர் வசந்தா 57. இவரது வீட்டருகே சுந்தரபாண்டி, நித்யா, பழனிச்சாமி, நாகுப்பிள்ளை, நாகலட்சுமி, கார்த்திக் வசித்தனர். இவர்கள் வசந்தாவிடம், அவரது மகன் சரவணனுடன் சேர்ந்து தொழில் செய்யலாம் எனக்கூறி ரூ.14 லட்சம் பெற்றனர்.பல மாதங்களாகியும் தொழிலையும் துவங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் இழுத்தடித்தனர். வசந்தா, நித்யா தரப்பினரிடம் கேட்டபோது தகாத வார்த்தையில் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். நித்யா, பழனிச்சாமியை நிலக்கோட்டை போலீசார் கைது செய்தனர். மற்ற நால்வர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X