சிதிலமடைந்த நிழற்குடை பயணியர் கடும் அவதி

Added : பிப் 05, 2020
Advertisement

தாம்பரம்:கேம்ப் சாலை பேருந்து நிறுத்த நிழற்குடையில், மேற்கூரை இல்லாததால், பயணியர் அவதியுறுகின்றனர்.

சேலையூர், கேம்ப் சாலை வழியாக, வேளச்சேரி, தி.நகர், அகரம்தென், பொன்மார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களுக்கு, தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இச்சாலையில் உள்ள பேருந்து நிறுத்த நிழற்குடை, சில மாதங்களாக சேதமடைந்து உள்ளது.

நிழற்குடை முற்றிலும் இல்லாததால், பேருந்திற்காக நீண்ட நேரம், திறந்தவெளியில் காத்திருக்க வேண்டி அவல நிலை நீடிக்கிறது.இதனால், முதியவர்கள், மாணவர்கள் உட்பட, பலர் அவதியடைகின்றனர். பயணியர் நலன் கருதி, நிழற்குடையை சீரமைக்க, அதிகாரிகள் முன்வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X