பொது செய்தி

தமிழ்நாடு

அறுவடை இயந்திரம் பற்றாக்குறை வாடகை உயர்வால் விவசாயிகள் கவலை

Added : பிப் 05, 2020
Advertisement

கம்மாபுரம்:சம்பா நெல் அறுவடை பணி தீவிரமடைந்ததால், அறுவடை இயந்திரங்கள் பற்றாக்குறையை பயன்படுத்தி, இடைத்தரகர்கள் வாடகையை உயர்த்தியதால், விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் நடப்பாண்டில் 2.5 லட்சம் ஏக்கரில் சம்பா நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. எப்போதும் இல்லாத அளவிற்கு மாவட்டத்தில் பருவ மழை பெய்ததால், விளைச்சல் அமோகமாக உள்ளது.கம்மாபுரம், பண்ருட்டி, விருத்தாசலம், கடலூர் ஒன்றியங்களில் நெல் அறுவடை பணி துவங்கியுள்ளது. விருத்தாசலம், கம்மாபுரம் ஒன்றிய பகுதியில், போதிய அளவு நெல் அறுவடை இயந்திரங்கள் கிடைக்காததால், விவசாயிகள் காத்துக் கிடக்கின்றனர்.ஒரே நேரத்தில் பல ஊர்களிலும் நெல் அறுவடை துவங்கப்பட்டுள்ளதால் அறுவடை இயந்திரத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இதனால், ஒரு மணி நேரத்திற்கு டயர் அறுவடை இயந்திரத்திற்கு 1,400 ரூபாயாக இருந்த வாடகை தற்போது 1,800 ரூபாயாக இடைத்தரகர்கள் உயர்த்தியுள்ளனர். மேலும், ஈரப்பதம் உள்ள வயல்களில் பெல்ட் அறுவடை இயந்திரத்திற்கு 1,800 ரூபாயாக இருந்த வாடகை 2,700 ரூபாயாக உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X