பொது செய்தி

தமிழ்நாடு

பிராமணர் சங்க நிர்வாகிகள் தேர்வு

Added : பிப் 05, 2020
Advertisement
 பிராமணர் சங்க நிர்வாகிகள் தேர்வு

கடலுார்:கடலுார் மாவட்ட பிராமணர் சங்க தலைவராக அருணாச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தமிழ்நாடு பிராமணர் சங்கம், கடலுார் மாவட்டத்தின் 2020 - 25ம் ஆண்டிற்கான தலைவர் தேர்தல், திருப்பாதிரிபுலியூர் சங்கரமடத்தில் நடந்தது. மூத்த வழக்கறிஞர் அருணாச்சலம் தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்தார். அதில், முன்னாள் மாவட்ட தலைவர் விருத்தாசலம் அருணாச்சலம், புதிய மாவட்ட தலைவராக போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதை தொடர்ந்து நடந்த பொதுக் கூட்டத்தில், மாவட்ட பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.துணைத் தலைவர்களாக கூத்தப்பாக்கம் ராஜாராமன், சிதம்பரம் பாலகிருஷ்ணன், சாவடி வரதராஜன், பண்ருட்டி வெங்கடேசன், பொதுச் செயலராக முத்துக்கிருஷ்ணன், பொருளாளராக விருத்தகிரி, செயலர்களாக சிதம்பரம் ராகவன், திட்டக்குடி விருத்தகிரி, கூத்தப்பாக்கம் கணேசன், இணைச் செயலராக விருத்தாசலம் சூரியநாராயணன், இளைஞரணி செயலர்களாக விருத்தாசலம் கணேஷ், வேப்பூர் அருணாச்சலம் மற்றும் மகளிரணி செயலர்களாக விருத்தாசலம் சந்திரா, ஸ்ரீமுஷ்ணம் ராஜேஸ்வரி, கூத்தபாக்கம் ராஜேஸ்வரி சங்கரன், அமைப்பு செயலராக கடலுார் ஜெயராமன், ஆலோசகராக விருத்தாசலம் சுந்தரேசன் உள்ளிட்டோர் பொறுப்பேற்றனர்.ஏற்பாடுகளை, விருத்தாசலம் கிளை பொறுப்பாளர்கள் மற்றும் கூத்தப்பாக்கம் ராமசாமி செய்திருந்தார். மாவட்ட பொருளாளர் விருத்தகிரி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X