பொது செய்தி

தமிழ்நாடு

சென்னையில் 9 இடங்களில் புதிய நடைமேம்பாலம்

Added : பிப் 05, 2020
Advertisement

சென்னை:சென்னையில், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள ஒன்பது இடங்களில், நடைமேம்பாலம் அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

சென்னையில், 238 பாலங்கள், 14 மேம்பாலங்கள், 4 நடை மேம்பாலங்கள், 16 சுரங்கப்பாதைகள், 5 சுரங்க நடைபாதைகள் ஆகியவற்றை மாநகராட்சி பராமரித்து வருகிறது. இந்த பாலங்களை சீரமைக்கவும், பராமரிக்கவும் மாநகராட்சி பல்வேறு பணிகளை செய்து வருகிறது. இ.சி.ஆர்., - ஓ.எம்.ஆர்., சாலையை இணைக்கும் வகையில், ஆறு மேம்பாலம், கோயம்பேடு - விருகம்பாக்கத்தை இணைக்கும் பெரிய மேம்பாலம் ஆகியவற்றை அமைக்க, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், போக்குவரத்து நெரிசல் அதிகமுள்ள இடங்களில், பொதுமக்கள் சாலையை கடந்து செல்ல ஏதுவாக, ஒன்பது இடங்களில், நடைமேம்பாலம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக, ஒன்பது இடங்களில், முதற்கட்ட ஆய்வு பணியை மேற்கொள்ள, மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதில், சாலைகளில் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை, தேவையான நிலம், சமூக மற்றும் பொருளாதார நிலைமை உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட உள்ளன.ஆய்வு பணிகள் முடிந்த பின், பணிகள் துவங்கும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


எந்தெந்த இடங்கள்?



புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் அபிராமி மால், பெரம்பூர் ரயில் நிலையம், ஹாரிங்டன் சாலை மாநகராட்சி பள்ளி, ஆற்காடு சாலை விஜயா மால், அண்ணா நகர், 2வது அவென்யூ ஐயப்பன் கோவில், அண்ணா நகர் 4வது அவென்யூ கந்தசாமி கல்லுாரி, லஸ் கார்னர், எல்.பி., சாலை அடையாறு பேருந்து பணிமனை, சர்தார் படேல் சாலை அண்ணா பல்கலை ஆகிய ஒன்பது இடங்களில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X