நிச்சயம் நடக்கும்!

Added : பிப் 05, 2020 | கருத்துகள் (1)
Advertisement
நிச்சயம் நடக்கும்!

பா.ஜ., வை கடுமையாக விமர்சிக்கும், டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இப்போது அனுமன் மந்திரம் சொல்லத் துவங்கியுள்ளார்; இதை அவரே கூறியுள்ளார். வரும் காலத்தில், ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் அசாதுதீன் ஓவைசியும், இந்த மந்திரத்தை சொல்லும் நேரம் வரும்; நிச்சயம் இது நடக்கும்.

- யோகி ஆதித்யநாத், உத்தர பிரதேச முதல்வர், பா.ஜ.,


பயங்கரவாத முத்திரை!



குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்துபவர்களை, தேசவிரோதிகள் என, பா.ஜ., தலைவர்கள் விமர்சிக்கின்றனர். போராட்டம் நடத்துவோர் மீது, பயங்கரவாத முத்திரை குத்த முயற்சிக்கின்றனர். பிரதமர் மோடி, 'நான் இந்த நாட்டின் காவலாளி' என, தேர்தல் நேரங்களின் போது மட்டும் முழங்குகிறார்; மற்ற நேரங்களில், மக்களை அவர் பொருட்படுத்துவது இல்லை.

-மம்தா பானர்ஜி, மேற்கு வங்க முதல்வர், திரிணமுல் காங்.,


ஒன்றுக்கும் உதவாது!


மும்பை - ஆமதாபாத் புல்லட் ரயில் திட்டம், பிரதமர் மோடியின் கனவு திட்டமாக இருக்கலாம். ஆனால், அந்த திட்டத்தால், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் என்ன பயன் கிடைக்கும்? அதனால், தொழில் துறைக்கு என்ன வளர்ச்சி ஏற்படும்? அந்த திட்டத்துக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படும். ஆனால், அதனால், எந்த பயனும் இல்லை; அது, ஒன்றுக்கும் உதவாத திட்டம்.

-உத்தவ் தாக்கரே, மஹாராஷ்டிரா முதல்வர், சிவசேனா

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
05-பிப்-202019:28:58 IST Report Abuse
Malick Raja அவர் எப்படி இந்துக்களின் கடவுள்களை பற்றி பேசமுடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X