பொது செய்தி

தமிழ்நாடு

சாலை விரிவாக்க பணி 'ஜரூர்'

Added : பிப் 05, 2020
Advertisement
 சாலை விரிவாக்க பணி 'ஜரூர்'

புவனகிரி:'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியால், பூ.மணவெளி பாலம் பகுதியில் சாலை விரிவாக்க பணி நடந்து வருகிறது.
புவனகிரி- குறிஞ்சிப்பாடி சாலையில், பூ.மணவெளி முரட்டுவாய்க்கால் சாலை குறுகலாக இருந்ததால் அடிக்கடி விபத்து ஏற்பட்டது. பொதுமக்கள் கோரிக்கையின் பேரில், மாநில நெடுஞ்சாலை துறையில் ரூ. 1 கோடியே 50 லட்சம் செலவில், 15 மீட்டர் அகலம், 3.5 மீட்டர் உயரத்தில் பாலம் கட்டும் பணி, கடந்த ஜூலை மாதம் துவங்கியது.கட்டுமான பணிகள் முடிந்த நிலையில், தார் சாலை அமைக்காமல் கிடப்பில் போட்டனர். மேலும் புவனகிரி சாலையில் இரு கல்வெர்ட் பணியிலும் தார் சாலை அமைக்க வில்லை.தைப்பூசத்தை முன்னிட்டு சாலைகள் சரி செய்ய வில்லை என போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு, பக்தர்கள் பாதிக்கப்படுவர் என, திமனமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.அதன் எதிரொலியாக நேற்று பூ.மணவெளியில் சாலை விரிவாக்கம் மற்றும் சாலை சந்திப்பு மேம்பாடு மற்றும் கிருஷ்ணாபுரம் சாலையில் சில இடங்களில் 'பேட்ச் ஒர்க்' ஆகிய பணிகள், உதவிபொறியாளர் ஜெகன் மேற்பார்வையில் துவங் கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X