தமிழ்நாடு

ஒரே கட்டடத்தை உரிமை கோரும் அரசு துறைகள்

Added : பிப் 05, 2020
Advertisement

தேனி:தேனியில் ஒரே கட்டடத்தை இரு அரசு துறைகள் உரிமை கொண்டாடுவதால் யாருக்கு ஒப்படைப்பது என மாவட்ட நிர்வாகத்திற்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. தேனி நகராட்சி மேற்குத்சந்தையில் வேளாண் துறை அலுவலகம் 1950 ம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன் தேனி வேளாண் உதவி இயக்குனர் அலுவலகமாக செயல்பட்டது. 10க்கும் மேற்பட்ட அலுவலர்கள் பணியாற்றினர்.வேளாண், தோட்டக்கலை பொறியியல் துறையை ஒரு குடையின் கீழ் கொண்டு வர வேளாண் வளாகம் பெரியகுளம் ரோடு, சுக்குவாடன்பட்டி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் செயல்பட அரசு உத்தரவிட்டது. அதனையடுத்து 70 ஆண்டுகள் செயல்பட்ட வேளாண் துறை அலுவலகம் ஆண்டுகளாக மூடி வைத்து இருந்தனர். சொந்தம் கொண்டாடும் நகராட்சிஇந்த அலுவலக இடம் தங்களுக்கு சொந்தமானது என திடீரென வேளாண் அலுவலகத்தை தேனி அல்லிநகரம் நகராட்சி கைப்பற்றியது. அங்கு மறுசுழற்சி சேமிப்பு முகாம், துப்புரவு வண்டி, வாகனம் நிறுத்தவும், 4 வது மண்டல அலுவலகமாக மாற்றி செயல்பட்டு வருகின்றனர். இதை அறிந்த வேளாண் துறையினர் தாங்கள் 70 ஆண்டுகளாக வரி செலுத்தி பயன்படுத்தி வரும் அலுவலகத்தை எப்படி நகராட்சி கையகப்படுத்தலாம். தங்கள் பயன்பாட்டிற்கு தேவை என கேட்டு கட்டடத்தை திரும்ப ஒப்படைக்க கோரி நகராட்சியிடம் வலியுறுத்தியது. கலெக்டரிடம் முறையிட்டுள்ளனர்.மேற்கு சந்தையில் தினசரி ஏலக்கடைகள், வாரச்சந்தை இங்கு செயலபடுவதால் கிராம விவசாயிகள் அதிகம் வருகின்றனர். இங்கு வேளாண் டெப்போ அமைக்க திட்டமிட்டுள்ளோம். ஆனால் நகராட்சி கட்டடத்தை ஒப்படைக்க மறுப்பதாக வேளாண் அலுவலர்கள் புலம்புகின்றனர். ஒரே கட்டடத்தை இரு துறைகள் உரிமை கோருவதால் யாருக்கு ஒதுக்குவது என மாவட்ட நிர்வாகம் குழப்பத்தில் சிக்கித்தவிக்கிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X