தமிழ்நாடு

கண்ணகி நகரில் கண்ணை கவரும் ஓவியம் :ஜொலிக்கிறது குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

Added : பிப் 05, 2020
Advertisement
 கண்ணகி நகரில் கண்ணை கவரும் ஓவியம் :ஜொலிக்கிறது குடிசை மாற்று வாரிய குடியிருப்பு

கண்ணகி நகர்:சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த, கண்ணகி நகர் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டடங்களில், வண்ணமயமான சுவர் ஓவியம் வரையும் பணி நடக்கிறது.

ஒக்கியம் துரைப்பாக்கத்தில் உள்ள, கண்ணகி நகர், எழில் நகர் மற்றும் சுனாமி குடியிருப்பில், 23 ஆயிரம் வீடுகள் உள்ளன. நான்கு மாடி வரை, 'பிளாக்' பிரித்து, வீடுகள் கட்டப்பட்டுள்ளன.இந்த பகுதியை வண்ணமயமாக்க, 'ஸ்டிரீட் ஆர்ட் இந்தியா பவுண்டேஷன்' என்ற தன்னார்வ அமைப்பு, கட்டடங்களில் சுவர் ஓவியம் வரைய முன்வந்துள்ளது.

சென்னை மாநகராட்சி மற்றும் குடிசை மாற்று வாரியம் அனுமதியில், ஓவியம் வரையும் பணி நடைபெற்று வருகிறது. 14 'பிளாக்' கட்டடங்களில், சுவர் ஓவியம் வரையப்படுகிறது.முக உருவங்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், இயற்கை என, பலதரப்பட்ட வடிவங்களில் சுவர் ஓவியம் வரையப்படுகின்றன.

சில கட்டடங்கள், 50 அடி உயரம், 50 அடி அகலம் கொண்டவை. அதில், 'பூம்லிப்ட்' இயந்திரத்தில் நின்று, ஓவியம் வரையப்படுகிறது. இதற்காக, டில்லி, ஐதராபாத் பகுதியில் இருந்து, ஓவியர்கள் வந்துள்ளனர். இந்த பணி, ஒன்றரை மாதம் நடைபெற உள்ளது.

இது குறித்து, 'ஸ்டிரீட் ஆர்ட் இந்தியா பவுண்டேஷன்' நிர்வாகிகள் கூறியதாவது: சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்த, குடிசைப்பகுதி கட்டடங்களில் ஓவியம் வரைகிறோம். டில்லி, ஐதராபாத், மும்பை, கோல்கட்டா போன்ற இடங்களில், சுவர் ஓவியம் வரைந்துள்ளோம். இந்த ஓவியம், மழை, சுவர் நீர்கசிவால் அழியாது. ஏழு ஆண்டுகள் வரை இருக்கும்.

ஒன்றரை மாதத்தில், வண்ணமயமான கண்ணகி நகரை பார்க்கலாம். குடிசை மாற்று வாரியம், சென்னை மாநகராட்சி தேவையான உதவிகளை செய்கிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X