சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வரதட்சணை கொடுமை மனைவியை தாக்கியவர் கைது

Added : பிப் 05, 2020
Advertisement

கடலுார்:கர்ப்பிணி மனைவியை, வரதட்சணை கேட்டு தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
கடலுார், மஞ்சக்குப்பத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 36; இவரது மனைவி சத்யா, 28; திருமணமாகி மூன்றரை ஆண்டுகள் ஆகிறது. திருமணத்தின் போது, சீர்வரிசையாக 8 சவரன் நகை போடுவதாக சத்யாவின் பெற்றோர் கூறிய நிலையில், 5 சவரன் மட்டுமே போட்டுள்ளனர்.மீதமுள்ள 3 சவரன் நகையை கேட்டு பாலகிருஷ்ணன், சத்யாவிடம் அடிக்கடி தகராறு செய்துள்ளார். சத்யா 7 மாதம் கர்ப்பமாக உள்ள நிலையில், வரதட்சணை கேட்டு பாலகிருஷ்ணன், அவரது தந்தை ராமலிங்கம், 72, தாய் ஜானகி, 60; ஆகியோர் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் கடலுார் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து பாலகிருஷ்ணனை கைது செய்து, ராமலிங்கம், ஜானகியை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X