சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலை வழக்கு: மூவருக்கு 'குண்டாஸ்'

Added : பிப் 05, 2020
Advertisement
 வாலிபர் கொலை வழக்கு: மூவருக்கு 'குண்டாஸ்'

கடலுார்:வாலிபரை அடித்து கொலை செய்த வழக்கில், மூன்று பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
நெய்வேலி அடுத்த கொல்லிருப்பை சேர்ந்தவர் முனியன் மகன் பிரகாஷ், 24; இவர், கடந்தாண்டு நவ. 23ம் தேதி, நண்பர்களுடன் என்.எல்.சி., முதல் சுரங்கம் 'பி' பாயின்ட் அருகே உள்ள சாம்பல் ஏரி பகுதியில், மது அருந்தினார். அங்கு ஒரு வாலிபரும், பெண்ணும் உல்லாசமாக இருந்தனர். இதனை பிரகாஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிக் கேட்டதால் இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டது. இதில், பிரகாஷ் கொலை செய்யப்பட்டார். இது குறித்து நெய்வேலி தெர்மல் போலீசார் வழக்குப் பதிந்து ஆதண்டார் கொல்லை கிராமத்தை சேர்ந்த கார்த்திக், 25; கொல்லிருப்பு சதீஷ்குமார், 23; ராஜதுரை, 26; உட்பட 7 பேரை கைது செய்தனர்.
இதில், கார்த்திக் உட்பட நான்கு பேர் ஏற்கனவே குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.மேலும், இவ்வழக்கில் கடலுார் மத்திய சிறையில் உள்ள வட்டம் 18ஐ சேர்ந்த செல்வராஜ் மகன் சந்திரசேகர், 23; வட்டம் 28ஐ சேர்ந்த பாண்டியன் மகன் நீலகண்டன், 22; ஆரோக்கியதாஸ் மகன் அர்னால்டு, 20; ஆகியோரின் தொடர் குற்றச் செயல்களை தடுக்கும் வகையில், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் அன்புச்செல்வனுக்கு எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். கலெக்டர் உத்ரவிட்டதை தொடர்ந்து, மூவரையும் நெய்வேலி தெர்மல் போலீசார், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் உள்ளவர்களிடம் உத்தரவு நகலை வழங்கினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X