பொது செய்தி

தமிழ்நாடு

தஞ்சை பெரிய கோவிலுக்கு புகழ் சேர்க்கும் நாணயங்கள்

Added : பிப் 05, 2020
Share
Advertisement
 தஞ்சை பெரிய கோவிலுக்கு புகழ் சேர்க்கும் நாணயங்கள்

பொள்ளாச்சி : ''தஞ்சை பெரிய கோவில் வரலாற்றை உணர்த்தும் வகையில், நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட்டுள்ளன,'' என பொள்ளாச்சி நாணயவியல் சங்க தலைவர் முரளி தெரிவித்தார்.
வரலாற்று புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில், கட்டட, சிற்ப கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. 1,000 ஆண்டுகளுக்கு மேலான பழமை வாய்ந்த கோவிலில், 1997ம் ஆண்டுக்கு பின், இன்று கும்பாபிஷேக விழா நடக்கிறது.வரலாற்று சின்னமாக உள்ள கோவில் கோபுரத்தை நாணயங்கள், ரூபாய் நோட்டுகளில் வெளியிடப்பட்டு, புகழை பரப்பியுள்ளனர்.

இந்திய ரிசர்வ் பாங்க் வெளியிட்ட கோவில் கோபுரம் பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை, இன்னும் பாதுகாத்து வருகின்றனர் நாணவியல் சேகரிப்பாளர்கள்.பொள்ளாச்சி நாணயவியல் சங்க தலைவர் முரளி கூறியதாவது:சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக, 1954ம் ஆண்டு ஏப்., 1ம் தேதி, 1,000 ரூபாய் நோட்டில், தஞ்சை கோவிலின் படம் இடம்பெற்றது. ரிசர்வ் பாங்க் கவர்னர் பி. ராமராவ் அந்த ரூபாய் நோட்டை வெளியிட்டார்.அடுத்ததாக, 1957ல் ரிசர்வ் பாங்க் கவர்னராக இருந்த எச்.வி.ஆர்., ஐயங்கார் வெளியிட்ட ரூபாய் நோட்டு, மிகவும் பழமை வாய்ந்ததுடன் அரியதாக உள்ளது.

கடந்த, 1962ம் ஆண்டு பி.வி., பட்டாச்சார்யா, 1975ல் சென்குப்தா மற்றும் கே.ஆர்., பூரி ஆகியோரால் வெளியிடப்பட்டது. அனைத்து ரூபாய் நோட்டிலும் கோவில் படம் இடம் பெற்றுள்ளது. கோவில் கட்டப்பட்டு, 1,000 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, 2010ம் ஆண்டு, 1,000 ரூபாய் வெள்ளி நாணயம் வெளியிடப்பட்டது. இவ்வகை நாணயம் சேகரிக்கப்பவர் களுக்காக வெளியிடப்பட்டது;

புழக்கத்துக்கு வரவில்லை.தமிழகத்தில், வரலாற்றை உணர்த்தும் தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் கோவில் கோபுரம் பதிக்கப்பட்ட ரூபாய் நோட்டு மற்றும் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X