பொது செய்தி

தமிழ்நாடு

7ம் தேதி சென்னையில் வேலைவாய்ப்பு முகாம்

Added : பிப் 05, 2020
Advertisement

சென்னை:தனியார் நிறுவனங்களில், 1,000 பேருக்கும் மேல் வேலை வாய்ப்பு வழங்கும் சிறப்பு முகாம், 7ம் தேதி சென்னையில் நடக்கிறது.

தமிழக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை சார்பில், மாவட்டந்தோறும் தனியார் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்படுகிறது. வாரந்தோறும், 'வேலைவாய்ப்பு வெள்ளி' என்ற பெயரில் நடத்தப்படுகின்றன. சென்னையில், 7ம் தேதி நடக்கும் முகாமில், தனியார் நிறுவனங்களில், 1,000க்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது.

முகாமில் வேலைவாய்ப்பு வழங்குவதற்கு, தனியார் நிறுவனங்கள் பதிவு செய்து வைத்துள்ளன. கிண்டியில், ஆலந்துார் சாலையில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில், காலை, 10:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை முகாம் நடக்கிறது.எட்டாம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு முடித்தவர்கள் வரை, முகாமில் பங்கேற்று வேலைவாய்ப்பு பெறலாம் என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறை இயக்குனர் விஷ்ணு அறிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X