பொது செய்தி

இந்தியா

புற்றுநோய் கண்டறிய இலவச மருத்துவ முகாம்

Added : பிப் 05, 2020
Advertisement
 புற்றுநோய் கண்டறிய இலவச மருத்துவ முகாம்

புதுச்சேரி:ரோட்டரி சங்கங்கள் சார்பில், மார்பக புற்றுநோய் கண்டறியும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.
புதுச்சேரி சென்ட்ரல் ரோட்டரி சங்கமும், புதுச்சேரி ஈவ்ஸ் ரோட்டரி சங்கமும், அப்பல்லோ புரோட்டான் கேன்சர் மையத்துடன் இணைந்து, மார்பக புற்றுநோய் கண்டறியும் இலவச பரிசோதனை முகாமிற்கு ஏற்பாடு செய்திருந்தன.துவக்க விழாவுக்கு, இந்திய மருத்துவக் கழகத்தின் புதுச்சேரி தலைவர் ஸ்ரீனிவாசன், சென்ட்ரல் ரோட்டரி சங்க தலைவர் சுரேஷ் முத்து, ஈவ்ஸ் ரோட்டரி சங்க தலைவி மரி அன்னா மஞ்சு, சேவை திட்ட தலைவர் வைத்தியநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கதிர்காமத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில் நடந்த இலவச மருத்துவ பரிசோதனை முகாமை, சுகாதாரத் துறை இயக்குனர் மோகன்குமார், அரசு மருத்துவக் கல்லுாரி இயக்குனர் பூபதி ஆகியோர் துவக்கி வைத்தனர்.புற்றுநோய் பரிசோதனைக்காக, சென்னையில் இருந்து அதிநவீன மருத்துவ உபகரணங்களுடன்கூடிய வாகனம் வந்திருந்தது. காலையில் இருந்து மாலை வரை நடந்த முகாமில் 70க்கும் மேற்பட்ட பெண்களுக்கு டாக்டர்கள் மருத்துவ பரிசோதனை செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X