பொது செய்தி

இந்தியா

'லவ் ஜிகாத்' வழக்குகள்: மத்திய அரசு, 'சூப்பர்' பதில்

Updated : பிப் 05, 2020 | Added : பிப் 05, 2020 | கருத்துகள் (18)
Advertisement
LoveJihad,Kerala,Parliament,லவ்ஜிகாத்,வழக்கு,மத்தியஅரசு

புதுடில்லி: 'லவ் ஜிகாத்' எனப்படும், இளம்பெண்களை காதலித்து, கட்டாய மதமாற்றம் செய்யும் நிகழ்வுகள், கேரளாவில் அதிகம் நடைபெறும் நிலையில், 'நாடெங்கும் லவ் ஜிகாத் தொடர்பாக எந்த வழக்கும் இல்லை' என, பார்லி.,யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புலனாய்வுமற்ற மதங்களைச் சேர்ந்த இளம்பெண்களை காதலித்து, முஸ்லிம் மதத்துக்கு மாறும்படி கட்டாயப்படுத்தும், லவ் ஜிகாத் நிகழ்வுகள், கேரளாவில் அதிகம் நடப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் மிகவும் பிரபலமானது, ஹாதியா என்ற பெண் தொடர்பான வழக்கு.

இந்நிலையில், இது தொடர்பாக, லோக்சபாவில் ஒரு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. 'கேரளாவில் லவ் ஜிகாத் வழக்குகள் இல்லை என்று கேரளா உயர் நீதிமன்றம் கூறியுள்ளது குறித்து அரசுக்கு தெரியுமா' என, கேள்வியில் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில், மத்திய உள்துறை அமைச்சகம் கூறியுள்ளதாவது: லவ் ஜிகாத் என்ற வார்த்தை, சட்டத்தின் கீழ் விவரிக்கப்படவில்லை. லவ் ஜிகாத் தொடர்பாக மத்திய அமைப்புகள் எதுவும் தெரிவிக்கவில்லை.அதே நேரத்தில் கேரளாவில், வெவ்வேறு மதத்தினர் இடையேயான இரண்டு திருமணங்கள் தொடர்பான புகார்களை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தகவல் ஏதும் இல்லை


'துக்டே துக்டே கேங்க்' என, எதிர்க்கட்சிகளை, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் விமர்சித்து வருகின்றனர். இந்த துக்டே துக்டே கேங்க் தொடர்பான தகவல் அளிக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு, சமூக ஆர்வலர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டிருந்தார். 'அது தொடர்பான தகவல் ஏதும் இல்லை' என, மத்திய உள்துறை அமைச்சகம் பதில் அளித்திருந்தது. இந்த நிலையில், லவ் ஜிகாத் குறித்தும் எந்த வழக்கும் இல்லை என, கூறியுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
AMERICAN THE GREAT👍 - Khobar,சவுதி அரேபியா
08-பிப்-202015:20:28 IST Report Abuse
AMERICAN THE GREAT👍 வழக்கு எதுவும் இல்லை என்றால் சந்தோசம். பாய் பெண்கள் எத்தினி பேரு மட்ட மத ஆட்களை திருமணம் முடித்துள்ளனர் ? இது அதிகமா இருக்க வேண்டும்..
Rate this:
Share this comment
Cancel
ashak - jubail,சவுதி அரேபியா
07-பிப்-202002:52:58 IST Report Abuse
ashak துக்கடா துக்கடா குரூப்புக்கு எதுக்கு பயப்புடுறீங்க , நீங்க ஆணையா இருக்கலாம் ஆனா எறும்புக்கு பயந்துதான் ஆகணும் , இது இயற்க்கை
Rate this:
Share this comment
Cancel
Rafi - Riyadh,சவுதி அரேபியா
06-பிப்-202019:37:03 IST Report Abuse
Rafi ஏற்கனவே ஹாதியா வழக்கில் உச்ச நீதிமன்றம் வரை வழக்கை இழுத்தடித்து அவமானத்தை தழுவியும், மீண்டும் இஸ்லாத்தில் இல்லாததை மட்டுமே தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக இருப்பதுபோல் பொய்யை திரும்ப திரும்ப எக்ஸ்ட்ரா கொஞ்சம் சேர்த்து கூறி வருபவர்கள், சட்டப்படியான கேள்விக்கு எங்கிருந்து பதில் கொடுக்க முடியும், இனியாவது இந்த பித்தலாட்டவாதிகளை பற்றி அக்கட்சியின் அடிமட்டங்கள் அறிந்து திருந்தி கொள்ள முன்வருவார்களா?
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
07-பிப்-202002:51:01 IST Report Abuse
ashakசெருப்பை சாணில முக்கி அடிச்சாலும் எதுவுமே நடக்காத மாதிரி இருக்கானுவ...
Rate this:
Share this comment
Cheran Perumal - Radhapuram,இந்தியா
07-பிப்-202015:24:52 IST Report Abuse
Cheran Perumalஹாதியா வழக்கிற்காக, எச்டிபிஐ இடமிருந்து ரூ.ஒரு கோடி வரை பணம் பெற்றதாக காங்கிரஸ் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர். இரண்டு தனி நபர்கள் இடையேயான இந்த வழக்கிற்கு இஸ்லாமிய நிறுவனம் எதற்க்காக இவ்வளவு பணத்தை செலவு செய்தது என்று கூற முடியுமா? இவர்களேதான் அந்த திருமணத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள் என்பது வெட்ட வெளிச்சமாகவில்லையா?...
Rate this:
Share this comment
ashak - jubail,சவுதி அரேபியா
08-பிப்-202001:24:44 IST Report Abuse
ashakமொத்த வழக்கின் செலவுதான் ஒரு கோடியே தவிர , கபில் சிபிலுக்கு மட்டுமல்ல ஒரு கோடி , இரண்டு தனி நபர்களுக்கு இடையேயான சாதாரண திருமணத்தை நிரூபிக்க இந்திய நாட்டில் ஒரு கோடி செலவு செய்யும் அளவுக்கு இந்திய சட்டம் இருக்கு என்று அரசு வெக்கம் கொள்ளவேண்டும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X