எல்.ஐ.சி., ஊழியர்கள் ஒரு மணி நேரம் ஸ்டிரைக்| Dinamalar

எல்.ஐ.சி., ஊழியர்கள் ஒரு மணி நேரம் 'ஸ்டிரைக்'

Added : பிப் 05, 2020
Share
 எல்.ஐ.சி., ஊழியர்கள் ஒரு மணி நேரம் 'ஸ்டிரைக்'

புதுச்சேரி:எல்.ஐ.சி., நிறுவனத்தின் பங்குகளை விற்கும் நடவடிக்கையை கண்டித்து, ஒரு மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
சாரத்தில் அமைந்துள்ள எல்.ஐ.சி., நிறுவனத்தின் புதுச்சேரி கிளை-1 அலுவலகம் எதிரில், அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நேற்று மதியம் 12:00 மணி முதல், 1:00 மணி வரை ஒரு மணி நேரம் வெளிநடப்பு செய்து, வேலைநிறுத்தப் போராட்டம் நடந்தது. மா.கம்யூ., நிர்வாகி முருகன், கோரிக்கையை விளக்கி பேசினார்.அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்க தலைவர் செந்தில் அழகுமணி தலைமை தாங்கினார். செயலர் நாகராஜன், பொருளாளர் முருகன், முதல்நிலை அதிகாரிகள் சங்க ஆண்டோ, வளர்ச்சி அதிகாரிகள் சங்க ரங்கசாமி, முகவர்கள் சங்க லட்சுமிநரசிம்மன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.மனோகர் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X