சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாலிபர் கொலையில் ஐந்து பேர் சரண்

Added : பிப் 05, 2020
Share
Advertisement

குன்றத்துார்:குன்றத்துார் அருகே, நாட்டு வெடிகுண்டுகள் வீசி ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில், ஐந்து பேர், விழுப்புரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

குன்றத்துாரை அடுத்த பழந்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன், 35; இவர், 2ம் தேதி இரவு, வீட்டில் இருந்தபோது, காரில் வந்த மர்ம கும்பல், நாட்டு வெடிகுண்டுகளை வீசியும், சரமாரியாக வெட்டியும் கொலை செய்தது.இது தொடர்பாக, குன்றத்துார் போலீசார் வழக்கு பதிந்து, ஐந்து தனிப்படைகளை அமைத்து, குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், கொலையில் தொடர்புடையதாக கூறி, குன்றத்துாரைச் சேர்ந்த மணிகண்டன், 25, தினேஷ்குமார், 25, மணிகண்டன், 24, ஸ்ரீராம், 25, கருணாகரன், 23, ஆகிய ஐந்து பேர், விழுப்புரம் நீதிமன்றத்தில், நேற்று சரணடைந்தனர்.

ஐந்து பேரும், நீதிபதி உத்தரவில், சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க, குன்றத்துார் போலீசார் முடிவு செய்துள்ளனர். அதன் பின்னரே, கொலைக்கான காரணம் தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X