பொது செய்தி

இந்தியா

பிறப்பு, இறப்பை ஆன்லைனில் பதிய பயிற்சி

Added : பிப் 05, 2020
Share
Advertisement
 பிறப்பு, இறப்பை ஆன்லைனில் பதிய பயிற்சி

புதுச்சேரி:பிறப்பு, இறப்பை ஆன்லைனில் பதிய பயிற்சி முகாம் நேற்று நடந்தது.
புதுச்சேரி உள்ளாட்சித்துறை மற்றும் தேசிய இணைய வலைதள தகவல் மையம் இணைந்து, ரெட்டியார்பாளையம், ஜெயா நகர், பி.எஸ்.என்.எல்., குடியிருப்பு வளாகத்தில் உள்ள ஐ.சி.டி., கலந்தாய்வு அரங்கில், புதுச்சேரியில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், பதிவாளர்கள் மற்றும் பிறப்பு, இறப்பு பதிவு மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு இணைய வலை தளம் மூலம் பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்வதற்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.உள்ளாட்சித்துறை பிறப்பு மற்றும் இறப்பு மாவட்ட துணை பதிவாளர் சுந்தரராஜன் வரவேற்றார். தேசிய இணைய வலைதள தகவல் மைய தொழில்நுட்ப இயக்குநர்கள் ஸ்ரீதரன் மற்றும் மோகன் பயிற்சி அளித்தனர்.அப்போது, புதிய இணைய வலைதளம் மூலம் எவ்வாறு பிறப்பு மற்றும் இறப்பினை பதிவு செய்வது என்பது குறித்தும், பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தனர்.கடந்த காலத்தில், நடைமுறையில் உள்ள சாப்ட்வேர் மூலம் குறிப்பிட்ட கம்ப்யூட்டர் மூலம் மட்டுமே பிறப்பு மற்றும் இறப்பு பதிவு செய்யும் சூழல் இருந்தது.
எதிர்வரும் காலங்களில் இணையதள சாப்ட்வேர் மூலம் பிறப்பு, இறப்பு விபரங்கள் பதிவு செய்யவும், பதிவிறக்கம் செய்யவும் அலுவலர்கள் எங்கிருந்தாலும் விபரங்களை பதிவு செய்யவும், விரைவாக செயல்படுத்தும் முறையில் மிகவும் பாதுகாப்பான பரிவர்த்தனை மற்றும் விவரங்கள் அறியும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது.இந்த பயிற்சியில் உள்ளாட்சித்துறை, நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்தை சேர்ந்த 60 அதிகாரிகள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.உழவர்கரை நகராட்சி கம்ப்யூட்டர் மைய அதிகாரி ராமசாமி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X