பொது செய்தி

இந்தியா

ஆசிரியர் கல்வியில் ஒருங்கிணைந்த சந்திப்பு

Added : பிப் 05, 2020
Share
Advertisement
 ஆசிரியர் கல்வியில் ஒருங்கிணைந்த சந்திப்பு

புதுச்சேரி:புதுச்சேரி அரபிந்தோ சொசைட்டி மற்றும் ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் ( என்.சி.டி.இ.,) சார்பில், ஆசிரியர் கல்வியில் ஒருங்கிணைந்த சந்திப்பு என்ற கருத்தரங்கை நடத்தியது.
புதுச்சேரி செயின்ட் மார்த்தேன் வீதியில் உள்ள அரபிந்தோ சொசைட்டியில் நடந்த கருத்தரங்கில், சமபிராந் ஷர்மா வரவேற்றார்.என்.சி.டி.இ.,யின் தலைவர் சட்பிர் பேடி தலைமை தாங்கினார்.பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் ருத்ரகவுடு பேசுகையில், பள்ளிகள் கல்வியை மட்டும் போதிக்காமல் வாழ்க்கைக்கான கல்வி அதன் மகத்துவம் மற்றும் கலாசாரத்தையும் சேர்த்து மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். மேலும் மாணவர்கள் உளவியல் ரீதியில் அறிந்த கொள்ள ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.அரபிந்தோ சொசைட்டி நிர்வாக மற்றும் நிதி நிலை இயக்குனர் விஜய் போதார், மாணவ பருவத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.என்.சி.டி.இ., தலைவரும் ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சட்பிர்பேடி, செயலாளர் சஞ்சய் அவஸ்தி, ஆசிரியர் பயிற்சி கல்வி வல்லுனர்கள், என்.சி.டி.இ., அதிகாரிகள் பள்ளி தலைமை ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் பங்கேற்றனர்.கருத்தரங்கில், ஆசிரியர்களுக்கு தேவையான புதிய உக்திகளை கண்டறிந்து புதுவிதமான ஆசிரியர் பயிற்சி கல்வியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு சிறந்த ஆசிரியர் பயிற்சி பள்ளியை கண்டறிந்து அதை அனைத்து விதத்திலும் சிறந்த கல்வி நிறுவனமாக வடிவமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X