சீன மருத்துவமனை ரகசியம்

Added : பிப் 05, 2020 | கருத்துகள் (9)
Advertisement
 சீன மருத்துவமனை ரகசியம்

'கொரோனா' வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக, சீன அரசு வூஹான் நகரில் பத்து நாட்களில் ஒரு பெரிய தற்காலிக மருத்துவமனையை கட்டி முடித்து பயன்பாட்டுக்கு திறந்துள்ளது.

இதன் சிறப்பம்சங்கள்.

 ஜன., 23ல் தொடங்கி பிப்., 2 முடிக்கப்பட்டது.

 புதிய மருத்துவமனைக்கான திட்டம் 5 மணி நேரத்திலும், கட்டுமானத்தின் வடிவம் 24 மணி நேரத்திலும் முடிக்கப்பட்டது.

 ஒரே நேரத்தில், 800 கனரக வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

 6.45 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.

 இரண்டு மாடிகள், 30 ஐ.சி.யு., வார்டு, பல தனி வார்டுகள், 1000 படுக்கைகள் என பல வசதிகள் உள்ளன.

 இதில் அறைகள், 'ரெடிமேட்' அறைகளாக பொருத்தப்பட்டன.

 நோயாளிகள் வார்டு, டாக்டர்கள் அறை, நர்ஸ் அறை, பாத்ரூம்ஸ் என நான்கு வகை அறைகள் உள்ளன.

 வூஹான் மருத்துவமனையில் இருந்து, பீஜிங் ராணுவ தலைமை மருத்துமனை டாக்டர்களுடன் உரையாடுவதற்கு, 'வீடியோ கான்பரன்சிங்' வசதி செய்யப்பட்டுள்ளது.

 இப்புதிய மருத்துவமனையில் பயன்படுத்தப்பட்டுள்ள மருத்துவ உபகரணங்கள், வூஹான் நகரில் உள்ள மற்ற மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ தொழிற்சாலைகளில் இருந்து பெறப்பட்டுள்ளன.

 சீன ராணுவத்தின் மருத்துவ பிரிவை சேர்ந்த டாக்டர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட, 1400 பேர் குழுவினரும் மருத்துவமனை பணியில் ஈடுபட்டனர் என 'குளோபல் டைம்ஸ்' செய்தி தெரிவித்துள்ளது.

2003ல் நடந்தது என்ன ஏற்கனவே, 2003ல் 'சார்ஸ்' வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க, பீஜிங்கில் இதுபோல ஒரு மருத்துவமனையை, ஏழு நாளில் சீனா கட்டி முடித்தது. 4 ஆயிரம் பேர், பகல், இரவாக பணியில் ஈடுபட்டனர். இதில் எக்ஸ்-ரே அறை, சி.டி., ஸ்கேனர் அறை, ஆய்வகம், ஐ.சி.யு., ஒவ்வொரு வார்டுக்கும் கழிப்பறை போன்ற பல வசதிகள் இருந்தன. இரண்டு மாதத்தில் சீனாவின் ஒட்டுமொத்த 'சார்ஸ்' பாதிக்கப்பட்டவர்களில், ஏழில் ஒரு பகுதியினருக்கு இம்மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
11-பிப்-202003:52:57 IST Report Abuse
J.V. Iyer டெக்னாலஜியில் சீனா எங்கேயோ போய்விட்டது. நாம் இன்னும் பின்தங்கி இருக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
10-பிப்-202019:18:29 IST Report Abuse
Poongavoor Raghupathy China constructing Hospital in 10 days and in India to finalyse the Land for Hospital took 3 years and after this a year is passed still foundation is not yet ready. We all Indians must be ashamed of this delay. Can we improve and learn from China. Definitely not because we have time only for protesting on the roads against Modi and to stop Rajini to enter into Politics with the help of Kishore.
Rate this:
Share this comment
Cancel
Shiv Ram - Chennai,இந்தியா
09-பிப்-202023:34:25 IST Report Abuse
Shiv Ram இங்கேயும் இருக்காங்களே, நம்ம ஊரு கம்யூனிஸ்டுகள். வயலில் நாற்று நட, அறுவடை செய்ய டிராக்டர் பயன்படுத்திய போது, அதற்க்கு எதிராக போராடினார்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X